தீபாவளி பயணம்…. ரயில் டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு
தீபாவளிக்கு ஊருக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு வருகிற செப்டம்பர் 6, 2026 அன்று துவங்கும் நிலையில் உடனடியாக முன்பதிவு செய்வது அவசியம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 4 : தீபாவளிக்கு ஊருக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு வருகிற செப்டம்பர் 6, 2026 அன்று துவங்கும் நிலையில் உடனடியாக முன்பதிவு செய்வது அவசியம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 8, 2026 அன்று கொண்டாடப்படவிருக்கிற நிலையில், சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம்.
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு
ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு பயணிப்பார்கள் என்பதால் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலை மோதும். கடைசி நேர சிக்கலை தவிர்க்க முன் கூட்டியே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்வது நல்லது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வருகிற செப்டம்பர் 6, 2026 அன்று துவங்குகிறது. இதுகுறித்து தெர்கு ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதையும் படிக்க : தோஷம் கழிப்பதாக நிர்வாண பூஜை – கனடா பெண்ணை மிரட்டி பணம் பறித்த ஜோசியர் கைது
அதன் படி,தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6, 2026 அன்று துங்குகிறது. பண்டிகை காலம் என்பதால் கடைசி நேர கூட்டத்தை தவிர்க்க, பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட பதிவு
Southern Railway’s Diwali bookings are opening soon!🚂
Reserve your train tickets starting September 6th.
Plan ahead to avoid the holiday rush and secure your seats early! 🪔#SouthernRailway #Diwali2026 #Travel #IndianRailways #Train pic.twitter.com/dzuOWBnZby
— Southern Railway (@GMSRailway) September 4, 2026
பொதுவாக இந்திய ரயில்வேயில் தற்போது வழக்கமான முன்பதிவு 120 நாட்களாக இருந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு 60 நாட்களாக குறைக்கப்பட்டது. முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளை கடைசி நேரத்தில் கேன்சல் செய்வதாகவும் அதனை தடுக்கவே 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த 2026 ஆம் ஆண்டு தீபாவளி நவம்பர் 8 ஆம் தேதி வருகிறது. இதனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : முன்னறிவிப்பின்றி லைனாக மூடப்படும் டாஸ்மாக் கடைகள்.. அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசு.. யார் யார் என லிஸ்ட் எடுக்கும் நிர்வாகம்!!
நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி வரும் நிலையில் நவம்பர் 5, 2026 அன்று சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு செப்டம்பர் 6, 2026 ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு துவங்குகிறது. அதற்கு அடுத்தடுத்த நாட்கள் பயணிப்பவர்கள் தங்கள் பயண தேதியை பொறுத்து செப்டம்பர் 6 தொடங்கி தங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலம்.