AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

BCCI Meeting: விலகும் அஜித் அகர்கர்..? கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? பிசிசிஐ விளக்கம்!

Ajit Agarkar: நேற்று அதாவது 2026 செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், தலைமைத் தேர்வாளராக அகர்கரின் பதவிக்காலம் குறித்தும் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அகர்கரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படலாம் என்ற கூற்றுகள் எழுந்தன. ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

BCCI Meeting: விலகும் அஜித் அகர்கர்..? கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? பிசிசிஐ விளக்கம்!
பிசிசிஐ கூட்டம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Sep 2026 19:28 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்று அதாவது 2026 செப்டம்பர் 3ம் தேதி ஒரு முக்கியக் கூட்டத்தை நடத்தியது. இதில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் முதல் ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் வரை அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் இயக்குநர் விவிஎஸ் லட்சுமனும் கலந்துகொண்டார். இருப்பினும், இந்திய சீனியர் அணியின் (Indian Cricket Team) தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அகர்கர் காணொளி வாயிலாகக் கூட கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து பிசிசிஐ தற்போது ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.

ALSO READ: 2027 உலகக்கோப்பை: ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இல்லையா? பிசிசிஐ கூட்டத்தில் நடந்தது என்ன?

அஜித் அகர்கரின் பதவிக்காலம் வருகின்ற 2026 செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது, எனவே இந்தக் கூட்டத்தில் அவரது பங்கேற்பு முக்கியமானதாக இருந்தது. இருப்பினும், அஜித் அகர்கர் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜித் அகர்கர் பங்கேற்காதது குறித்து விளக்கம் அளித்தா பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா, “அஜித் அகர்கர் வெளியூரில் இருந்ததால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. கூட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட்டப்பட்டதால், அகர்கர் அந்த நேரத்தில் நகரில் இல்லை. அஜித் அகர்கர் இருந்த இடத்திலிருந்து, பல முயற்சிகள் செய்தும் அவரால் இணையவழியில் கூட்டத்தில் இணைய முடியவில்லை,” என்றார்.

நேற்று அதாவது 2026 செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், தலைமைத் தேர்வாளராக அகர்கரின் பதவிக்காலம் குறித்தும் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அகர்கரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படலாம் என்ற கூற்றுகள் எழுந்தன. ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து சாய்கியாவிடம் வினவியபோது, ​​கூட்டத்தில் அதுபோன்ற எந்த விஷயமும் விவாதிக்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும், விவிஎஸ் லட்சுமன் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட மாட்டார் என தெளிவுப்படுத்தினார்.

ALSO READ: இந்தியாவும் ஜப்பானும் டி20 கிரிக்கெட்டில் முதல் முறை மோதல்.. அதுவும் இந்த சிறப்பு நாளிலா..?

விமர்சனத்திற்கு உள்ளான முடிவுகள்:

தலைமைத் தேர்வாளராக அஜித் அகர்கரின் முடிவுகள் கடந்த சில மாதங்களாகவே விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக கணிசமான வெற்றியைப் பெற்றுவந்த ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவியைப் பறித்தது அவற்றில் ஒன்றாகும். தற்போது சுப்மன் கில் கேப்டனாகியுள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவரும் அகர்கர்தான் என்று நம்பப்படுகிறது. அனுபவ வீரர்களைத் தொடர்ந்து அணியிலிருந்து நீக்கி, இளம் வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பை வழங்கும் அவரது முடிவும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

Follow Us