உலக அழகி 2026 இறுதி போட்டி.. எங்கு, எப்போது நடைபெறுகிறது?.. இந்தியர்கள் பார்ப்பது எப்படி?
Miss World 2026 Pageant Competition | 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியின் இறுதி சுற்று இன்று (செப்டம்பர் 05, 2026) தாய்லாந்தில் உள்ள நா டிராங் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த நிகிதா போர்வாள் பங்கேற்கிறார்.
நா டிராங், செப்டம்பர் 05 : ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி போட்டி (Miss Universe Pageant) நடைபெறும். இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அழகிகள் பங்கேற்பர். பல கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியில், இறுதி போட்டி மிக கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகி (2026 Miss World Pageant) போட்டி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 2026 உலக அழகி இறுதி போட்டி எங்கு நடைபெற உள்ளது, அதனை பார்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அழகி போட்டி 2026 – இறுதி போட்டி எப்போது, எங்கு?
உலக அழகி இறுதி போட்டி 2026, இன்று அதாவது செப்டம்பர் 05, 2026 தாய்லாந்தில் உள்ள நா டிராங் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு, உலக அழகி போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் ஹாட்ஸ்டார் தான். எனவே, இந்திய மக்கள் இன்று மாலை 5.30 மணி முதலே இந்த 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகி இறுதி போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) எக்ஸ்குளூசிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : போரை முடிவுக்கு கொண்டு வருவதே மனிதகுலத்தின் அழைப்பு” – அதிபர் புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியா சார்பில் பங்கேற்கும் அழகி யார்?
View this post on Instagram
உலக நாடுகளை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்பர். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் நிகிதா போர்வாள் பங்கேற்க உள்ளார். இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.இவர் 2024 ஆம் ஆண்டு, ஃபெமினா மிஸ் இந்தியா (Femina Miss India) பட்டம் பெற்றார்.
இதையும் படிங்க : ஷாங்காய் உச்சி மாநாடு: பிரதமர் மோடி- புதின் – ஷி ஜின்பிங் சந்திப்பின் மீது உலகமே கவனம்!
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய நிகிதா, அதன் பிறகு சில தியேட்டர் நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், உலக அழகி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள நிகிதா, பட்டத்தை வெல்வாரா என மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.