ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு.. பிரதமர் மோடி குறிப்பிட்ட 10 முக்கிய பாய்ண்ட்ஸ்!
PM Modi SCO Speech: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்காக அண்டை நாடுகளை மீண்டும் ஒருமுறை கடுமையாகச் சாடினார். பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி அவர் பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26வது உச்சிமாநாடு, கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்றது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்காக அண்டை நாடுகளை மீண்டும் ஒருமுறை கடுமையாகச் சாடினார். பாகிஸ்தானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், ஆள்சேர்ப்பு, தீவிரமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் ஆகியவற்றின் முழுமையான சூழலமைப்பையும் தகர்க்க வேண்டும் என்று கூறி, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி அவர் பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26வது உச்சிமாநாடு, கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்றது.
பிரதமர் பதிவு
Addressed the SCO Summit in Bishkek.
This Summit is special because we are marking 25 years since the start of SCO.
Here are the points I’ve raised in the Summit👇🏼 pic.twitter.com/oYZLLFvztf
— Narendra Modi (@narendramodi) September 1, 2026
பிரதமர் மோடி குறிப்பிட்ட 10 முக்கிய பாய்ன்ட்ஸ்
- SCO-வின் மூன்று முக்கிய தூண்கள் : பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்புகளை வலுப்படுத்தி, செயல்படுத்தக்கூடிய முடிவுகளை உருவாக்க வேண்டும்.
- பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் : பயங்கரவாத நிதியுதவி, ஆட்சேர்ப்பு, தீவிரவாதமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களைத் தடுக்க வேண்டும்.
- அரசு ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு : பயங்கரவாதத்தை எந்த சூழலிலும் ஒரு மூலோபாய கருவியாக பயன்படுத்தக் கூடாது.
- ஆப்கானிஸ்தானில் அமைதி : ஆப்கன் மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சி உதவி மற்றும் மனிதாபிமான ஆதரவு வழங்க வேண்டும்.
- மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : பிராந்திய மோதல்கள் தீவிரமடைவதைத் தடுத்து, எரிசக்தி பாதுகாப்பு, கடல் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்க வேண்டும்.
- போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வேண்டும் : போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக SCO நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
- நம்பகமான இணைப்பு : அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து, உள்ளடக்கிய இணைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.
- வர்த்தகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேம்பாடு: சுங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி, டிஜிட்டல் ஆவணங்களை விரிவுபடுத்தி, சரக்கு போக்குவரத்து வலையமைப்பை திறம்பட மாற்ற வேண்டும்.
- மக்கள் தொடர்புக்கு முக்கியத்துவம் : இளைஞர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் SCO ஒத்துழைப்பு அமைய வேண்டும்.
- இளைஞர் மற்றும் அறிவியல் பரிமாற்றம் : SCO Start-up Forum, Young Authors’ Conclave, Young Scientists’ Forum உள்ளிட்ட திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்