செப். 10 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் மழை இருக்குமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 5, 2026: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பாளையங்கோட்டையில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 39 டிகிரி செல்சியஸ், மதுரையில் 39 டிகிரி செல்சியஸ், கரூரில் 38 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 33.3 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: பேரவை நிகழ்வுகள் ஏஐ கேமரா கண்ணாடி மூலம் படம்பிடிப்பு? அமைச்சர் முகமது பர்வேஸ் அளித்த பரபரப்பு விளக்கம்!
5 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:
செப்டம்பர் 5: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 6 முதல் 8 வரை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9 மற்றும் 10: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வெல்கம் மேட் போட்டு தூங்கிய பெண்.. கை, கால்களை கட்டிப்போட்டு நகை-பணத்தை சுருட்டிய கும்பல்.. ராணிப்பேட்டையில் சம்பவம்!
சென்னையில் மழை இருக்குமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.