India vs Pakistan Women’s Asia Cup Live: பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா? காத்திருக்கிறது அனல் பறக்கும் மோதல்
INDW vs PAKW , Women's Asia Cup Live Score Updates in Tamil : 2026 மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, 2026 செப்டம்பர் 5, இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
LIVE NEWS & UPDATES
-
IND W vs PAK W LIVE: பாகிஸ்தானுக்கு எதிராக டி20யில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனைகள்..!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற டி20 போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார். அவர் 11 போட்டிகளில் 307 ரன்கள் எடுத்துள்ளார். ஹர்மன்பிரீத் 16 டி20 போட்டிகளில் 230 ரன்களுடன் இரண்டாவது வெற்றிகரமான பேட்ஸ்மேனாக உள்ளார்.
கடந்த 2026 செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை 2026 போட்டியில், இந்திய மகளிரணி ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியாவின் அடுத்த போட்டி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. 2026 மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, 2026 செப்டம்பர் 5, இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கும். போட்டிக்கான டாஸ் இரவு 7:30 மணிக்கு நடைபெறும். இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, பார்தி பூல்மாலி, ரேணுகா சிங், ஷெபாலி வர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கமாலினி (விக்கெட் கீப்பர்), நந்தனி ஷர்மா, பிரதிக் ராவல், க்ராந்தி சாரவா கவுட், ப்ரீமா சாரவா கவுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியில் பாத்திமா சனா, ஆயிஷா ஜாபர், நஷ்ரா சந்து, கால் பெரோசா (விக்கெட் கீப்பர்), முனீபா அலி (விக்கெட் கீப்பர்), வஹீதா அக்தர், துபா ஹசன், சாடியா இக்பால், உம்மே ஹானி, சதாப் ஷம்ஸ், மொமினா ரியாசத், அய்மன் பாத்திமா, சைரா ஜபீன், ஷைல்வால் ஜுல்ஃபிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Published On - Sep 05,2026 5:00 PM