AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் செப்டம்பர் 5, 2026 இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather Alert: இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Sep 2026 16:44 PM IST

சென்னை, செப்டம்பர் 5 : தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் செப்டம்பர் 5, 2026 இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : தவெக தலைவர்களின் மெகா பிளான்.. கம்யூனிஸ்ட் கட்சிகளை ஈர்க்குமா விஜய் தரப்பின் புதிய வியூகம்?

இதன் காரணமாக செப்டம்பர் 5, 2026 இன்று சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுரை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “தப்புனா தப்புதான்.. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்!”.. டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி!!

வெப்பநிலையை பொறுத்தவரை செப்டம்பர் 05, 2026 முதல் செப்டம்பர் 09, 2026 வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என்றும் இருப்பினும் தமிழகத்தின் உள் பகுதிகளில் சற்று உயரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை செப்டம்பர் 5, 2026 இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Follow Us