AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கலகலப்பாக இருக்கும் அன்பே டயானா படம்… ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!

Anbe Diana Movie OTT Review | தமிழ் சினிமாவில் இயக்குநர் பாரி இளவழகன் எழுதி இயக்கி நாயகனாக நடித்து உள்ள படம் அன்பே டயானா. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

கலகலப்பாக இருக்கும் அன்பே டயானா படம்… ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!
அன்பே டயானாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Sep 2026 19:00 PM IST

தமிழ் சினிமாவில் ஜமா என்ற படத்தினை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் பாரி இளவழகன். இவர் தமிழ் சினிமாவில் முன்னதாக படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில் அவர் இயக்குநராக அறிமுகம் ஆன படத்தில் அவரே நாயகனாகவும் நடித்து இருந்தார். அந்தப் படம் தெருக்கூத்து கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஓடிடியில் அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து பாரி இளவழகன் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் அன்பே டயானா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போதே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி அன்பே டயானா படத்தில் பாரி இளவழகனே நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா ரங்கநாதன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, நிகிலா சங்கர், இஸ்மத் பானு, செல் முருகன் மற்றும் சுதர்சன் காந்தி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

அன்பே டயானா படம் எப்படி இருக்கு?

ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த அன்பே டயானா படம் முழுக்க முழுக்க சென்னையில் உள்ள பெரும்பூர் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்தப் பகுதியில் தமிழ் மக்கள் மட்டும் இன்றி தென்னிந்திய மக்கள் மற்றும் ஆங்கிலோ இந்திய மக்களும் அதிக அளவில் வாழ்கிறார்கள். சென்னையில் உள்ள மற்ற பகுதியில் உள்ள மக்களுக்கும் இவர்களின் வாழ்க்கையும் நிறைய மாறுபட்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Kayadu Lohar: விமானத்தில் ரஜினிகாந்தை சந்தித்த தருணம்… கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த நாயகன் சிஎஸ்கே தன்னுடன் கல்லூரியில் படித்த ஆங்கிலோ இந்திய பெண்ணான மேஜிக்கை காதலிக்கிறார். கல்லூரியில் இருந்தே அவரை காதலிக்கும் சிஎஸ்கே தனது குடும்பத்திலும் காதலிக்கும் பெண்ணிடமும் காதலை வெளிப்படுத்தவே பயப்படுகிறார். ஒரு கட்டத்தில் மேஜிக் சிஎஸ்கேவின் காதலை ஏற்றுக்கொள்ளும் போது தனது அம்மா சாதி மீது வைத்துள்ள பற்று மற்றும் தனது குடும்பத்திற்கு மேஜிக் செட்டாக மாட்டார் என்று பிரிய நினைக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் இறுதியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.

படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி பாணியில் இருந்தாலும் இந்த சமூகத்தில் தற்போதும் நிலவும் சாதி ரீதியான பாகுபாட்டை மிகவும் அழகாக பேசியுள்ளார் இயக்குநர் பாரி இளவழகன். நாயகன் நாயகி மட்டும் இன்றி இந்தப் படத்தில் நடித்த அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… SJ.Suryah: எந்தவித மன உளைச்சலும் இல்லாமல்… சர்தார் 2 படம் குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா!

Follow Us