AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மம்முட்டியின் பர்த்டே ஸ்பெஷல்… ஓம் படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

OM Movie X Post Viral On Social Media | நடிகர் தனுஷின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஓம். இந்தப் படத்தில் இருந்து நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

மம்முட்டியின் பர்த்டே ஸ்பெஷல்… ஓம் படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Sep 2026 18:15 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவில் மட்டும் இன்றி  தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக ம்ட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் வரிசையாக மலையாள சினிமாவில் வெளியாகி வரும் நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் மம்முட்டி உடன் இணைந்து நடிகர்கள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மம்முட்டி பிறந்த நாளில் ஓம் படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:

இந்த ஓம் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் இன்று படக்குழு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வருகின்ற 07-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு சியா என்ற தலைப்பில் நடிகர் மம்முட்டியின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜப்பான் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகர் கார்த்தி

ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Kayadu Lohar: விமானத்தில் ரஜினிகாந்தை சந்தித்த தருணம்… கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

Follow Us