SJ.Suryah: எந்தவித மன உளைச்சலும் இல்லாமல்… சர்தார் 2 படம் குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா!
SJ Suryah About Sardar 2:தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் இயக்குனராகவும்,. வில்லனாகவும் படங்களில் பணியாற்றிவருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் புதிதாக நடித்துள்ள படம் சர்தார் 2. இந்த படமானது மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில், இப்படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ளார்.
தென்னிந்திய மொழி படங்களில் முக்கிய நடிகராகவும், வில்லனாகவும் மிகவும் பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா (SJ.Suryah). இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்தவருகிறார். இவர் தமிழக முதலமைச்சர் விஜய் (CM Vijay) முதல் நடிகர் ராம் சரண் (Ram Charan) வரை பல்வேறு பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் தற்போது இயக்குநராகவும் மீண்டும் படத்தை இயக்குகிறார் இதில் இவரே ஹீரோவாக நடிக்கும் நிலையில், கில்லர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார். இதில் கார்த்தி (Karthi), மாளவிகா மோகனன் (Malavika Mohanan) மற்றும் பல்வேறு பிரபலன்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த படமானது சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அண்மையில் நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, சர்தார் 2 திரைப்படம் எவ்வாறு இருக்கிறது என பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஜப்பான் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகர் கார்த்தி
சர்தார் 2 திரைப்படம் மற்றும் இயக்குநரின் பார்வை குறித்து பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா:
சர்தார் 2 பட நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “இப்போதெல்லாம், நமக்கு அதிக ஆபாசமும் ரத்தக் களரியும் நிறைந்த படங்கள் வருகின்றன. இந்தப் படம், எந்தவித மன உளைச்சலும் இல்லாமல், நல்ல பொழுதுபோக்குடன் ஒரு அழகான செய்தியையும் கொண்டுள்ளது. இது நீங்கள் ரசித்து மகிழக்கூடிய ஒரு படம்.
இதையும் படிங்க: சூர்யா சாருடன் நடிக்கும் போது தயக்கமும் பதற்றமும் இருந்தது – நடிகை கயாடு லோஹர்
மேலும், இந்தப் படத்தை திரையரங்குகளுக்குள் மட்டும் விட்டுவிடாதீர்கள். அதை உங்கள் இதயத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். இது புவி வெப்பமயமாதலைப் பற்றியது அல்ல. இது மனித வெப்பமயமாதலைப் பற்றியது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்தார் 2 திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
4 million + views for #Sardar2Trailer 💥
The wait is over and the release date is near ! Time to unleash the spirit ⚡️https://t.co/rLNrObqgfo
Agent @Karthi_Offl in full form ❤️🔥@Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69… pic.twitter.com/KHjouDIJBB
— Prince Pictures (@Prince_Pictures) September 3, 2026
சர்தார் 2 திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.