கருப்பனின் ஆட்டம் தொடர்கிறதா? இணையத்தில் வைரலாகும் கருப்பு 2 படத்தின் தகவல்
Karuppu Part 2 Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கருப்பு. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிடுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் 46 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்த இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியாக நடித்து இருந்தார். இவர் சாமியாக நடித்து இருந்தது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே நடிகர் சூர்யாவின் இந்த கருப்பு படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரில் அதிக அளவில் வசூல் செய்த படம் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் 46-வது படமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 47, 48 மற்றும் 49-வது படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சூர்யாவின் 50-வது படம் தொடர்பான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் கருப்பு 2 படத்தின் தகவல்:
கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, தனது 50-வது படமான சூர்யா 50க்கு ‘கருப்பு 2’-ஐ ஒரு முக்கியத் தேர்வாக சூர்யா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. வணிக ரீதியாகப் பெரும் வெற்றிபெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியாகவும், அதே சமயம் வலுவான வணிக வாய்ப்புகளைக் கொண்டதாகவும் இருப்பதால், கருப்பு 2 இந்தப் முக்கியத் திரைப்படத் திட்டத்திற்கு ஒரு சிறந்த தேர்வாக அமையக்கூடும். சூர்யா 50ஐ இயக்கப் பல முன்னணி இயக்குநர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read… Bigg Boss 10: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சீக்ரட் ரூம் இருக்கா? வைரலாகும் தகவல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
After the #Karuppu BLOCKBUSTER SUCCESS, #Suriya is said to be considering #Karuppu2 as one of the potential projects for his #Suriya50 milestone film.
A sequel to an INDUSTRY-HIT blockbuster with strong commercial potential, #Karuppu2 could be a major choice for this milestone… pic.twitter.com/86Ws4TeFQV
— Movies Singapore (@MoviesSingapore) September 5, 2026
Also Read… சூர்யாவின் 50-வது பட இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்



