AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் நச் பதில்!

Kulasekarapattinam Rocket Launch Pad : தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் எப்போது முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகல் தெரிவித்தார். அவர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் நச் பதில்!
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திறப்பு தேதி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Jul 2026 16:54 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளம் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது தொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விண்வெளியில் சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட சில வருடங்களிலேயே ஒரு ஸ்டார்ட் அப் தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முதல் ராக்கெட், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி உள்ளது. ராக்கெட் ஏவுதல் என்பது மிக மிக சவாலான விஷயம் ஆகும். இதை முதல் முயற்சியிலேயே ஸ்கை ரூட் என்ற தனியார் நிறுவனம் சாதித்து காட்டி வெற்றி பெற்றிருப்பதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு தொடக்கம் மட்டுமே. இந்த ஆண்டு 6 முதல் 7 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு உள்ளோம்.

நிகழாண்டில் 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டம்

2 ராக்கெட்டுகளின் தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை அடிப்படையில் உள்ளன. மீதமுள்ள 7 ராக்கெட்டுகள் இறுதி கட்ட பணிகளில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் ஏவுதளம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த பணிகள் அடுத்த ஆண்டு 2027 மார்ச் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோ அமைப்பில் இருந்து 100- க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணி முடிவதற்கு முன்னதாகவே ஓய்வு காரணமாக வெளியேறுவதால் இஸ்ரோ நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க: பெண்களின் பாதுகாப்பில் அதிரடி காட்டும் தமிழக அரசு.. 9,500-க்கும் மேற்பட்ட இடங்களில் சுழன்றடித்த சிங்கப்பெண் சிறப்புப் படை!

இஸ்ரோவின் 2- ஆவது ராக்கெட் ஏவுதளம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தூத்துக்குடி மாவட்டத்தில் 2- ஆவது ராக்கெட் ஏவுதளத்தை அமைத்து வருகிறது. ரூ.950 கோழி மதிப்பீட்டில் சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிவடையும் பட்சத்தில், இங்கிருந்து சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட்டுகளும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட உள்ளது.

2027- இல் ராக்கெட் ஏவுதளம் பணிகள் நிறைவு

இந்தப் பணிகள் கடந்த 2024- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நிலையில், 2026 -ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இஸ்ரோ நிறுவனத்தில் சில காரணங்களால் இந்த பணிகள் தாமதமாகி 2027 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: சமணர் படுகை மலையேறி படுத்துப் பார்த்த அமைச்சர் ராஜ்மோகன்.. மதுரையில் நடந்த திடீர் ஆய்வு!!

Follow Us