AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் மீண்டும் அமோனியா வாயு கசிவு – பரபரப்பு தகவல்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தனியார் ஐஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர் அருகே இறால் ஏற்றுமதி ஆலையில் அமோனியா வாயு கசிந்து 18 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மீண்டும் அமோனியா வாயு கசிவு – பரபரப்பு தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Jul 2026 22:36 PM IST

சென்னை, ஜூலை 19 : சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தனியார் ஐஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர் அருகே இறால் ஏற்றுமதி ஆலையில் அமோனியா வாயு கசிந்து 18 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மீண்டும் அமோனியா வாயு கசிவு

புதியதாக வேலைக்கு சேர்ந்த நபரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அமோனியா பரவலின் வீரியத்தைக் குறைந்துள்ளனர். இந்த நிலையில் முதற்கட்டமாக அந்தப் பகுதி முழுவதும் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த விபத்து காரணமாக யாரும் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகவில்லை. இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : கோவையில் பிரிட்ஜ் வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து – விபத்துக்கு காரணம் என்ன?

வாயு கசியத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு லேசான கண் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி, அப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக் கவசம் இன்றி எவரும் அந்தப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த செயின்ட் பீட்டர் அண்ட் பால் சீ ஃபுட்ஸ் என்ற தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென அ்மோனியாவாயு கசிவு ஏற்பட்டது. இதில், இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வெளி மாநிலங்களை சேர்ந்த சுமார் 18 பேர் வரை உயிரிழந்தனர்.

இதையும் படிக்க : வீட்டு வேலை செய்யாததால் கண்டிப்பு.. மனமுடைந்த மாணவி விபரீத முடிவு.. ஈரோட்டில் சோகமான சம்பவம்!

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழக அரசால் குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த குழுவானது அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் விசாரணை மேற்கொண்டது. இதில், இடைநிலை அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் முதல்வர் ஜோசப் விஜய்யிடம் முழு அறிக்கையை அந்த குழு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவர்களது உடலினை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்கு அரசு செலவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

 

 

Follow Us