AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பைக் மீது டாரஸ் லாரி மோதி 23 வயது இளம்பெண் உயிரிழப்பு.. சென்னை குரோம்பேட்டையில் நடந்த கோர சம்பவம்..

Chennai Crime: குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் பாண்ட்ஸ் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தபோது, மேம்பாலத்தில் ஏறிச் செல்ல வந்த டாரஸ் லாரி திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்துடன் இருவரையும் சுமார் 50 அடி தூரம் லாரி இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பைக் மீது டாரஸ் லாரி மோதி 23 வயது இளம்பெண் உயிரிழப்பு.. சென்னை குரோம்பேட்டையில் நடந்த கோர சம்பவம்..
உயிரிழந்த பெண்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 09 Sep 2026 12:58 PM IST

செப்டம்பர் 9, 2026: குரோம்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில், நர்சிங் படித்துவிட்டு வேலை தேடி வந்த 23 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தோழி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கும்பகோணத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஜமுனா (23), நர்சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இவரது தோழியான ஸ்ரீஜா (24), குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் குரோம்பேட்டையில் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

விபத்து நடந்தது எப்படி?

இந்நிலையில், ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஸ்ரீஜா ஸ்பிளெண்டர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நிலையில், ஜமுனா பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

மேலும் படிக்க: “திமுகவை இயக்கியது ரத்தீஷ் எனும் பவர் புரோக்கர்!”.. அமைச்சர் நிர்மல்குமார் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் பாண்ட்ஸ் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தபோது, மேம்பாலத்தில் ஏறிச் செல்ல வந்த டாரஸ் லாரி திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்துடன் இருவரையும் சுமார் 50 அடி தூரம் லாரி இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தலைநசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்த பெண்:

இந்த கோர விபத்தில் ஜமுனாவின் தலை நசுங்கி, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயமடைந்த ஸ்ரீஜா உடனடியாக தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: லாரியிலிருந்து விழுந்த ராட்சத இரும்புப் பொருள்.. பிரபல ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர் பரிதாப பலி.. சோழவந்தான் அருகே சோகம்!

விபத்து குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், விபத்தை ஏற்படுத்தியதாக கடப்பேரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சதீஷ் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நர்சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்த இளம்பெண், தோழியுடன் அறையில் தங்கியிருந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு:

இதனிடையே, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் தனியார் உணவகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் காரணமாக சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக வேகமாக திரும்பும்போது அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையற்ற வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்தி, விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Follow Us