களம் காணும் ஜனநாயகன்.. விஜய் ரசிகர்கள் மத்தியில் எகிறும் டி-ஷர்ட் மவுசு!
Jana Nayagan Movie T Shirts : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் பெயர் மற்றும் விஜய் படம் பொறிக்கப்பட்டுள்ள டி- சர்ட்டுகள் தயார் செய்யும் பணி திருப்பூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் வருகிற ஜூலை 23- ஆம் தேதி திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தை விழாக கொண்டாட வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். அதன்படி, முதல்வர் விஜயின் ஜனநாயகன் படத்தை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காக, முதல்வர் விஜயின் ரசிகர்களும், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் பிரத்தியேக டி-ஷர்ட் அணிந்து முதல் நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர். திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் 4 நாட்களில் உள்ள நிலையில், திருப்பூரில் 700- க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முதல்வர் விஜய் படம் மற்றும் ஜனநாயகன் படத்தின் பெயர்கள் பொறிக்கப்பட்ட டி- ஷர்ட்டுகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
விஜய் படத்துடன் டி- ஷர்ட் தயாரிக்கும் பணி
தமிழக முழுவதும் முதல்வர்கள் விஜய் படம் பொறித்த டி-ஷர்ட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதன் காரணமாக பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமிழக முழுவதும் கூரியர் வாயிலாக சேவை வழங்கி வருகின்றனர். நடிகராக இருந்து முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ள விஜயின் புகைப்படத்துடன் கூடிய பிரத்தியேக டி-ஷர்ட்டுகளுக்கு தமிழகத்தின் ஜவுளி மையமான திருப்பூர் ஆடை உற்பத்தி ஆலைகளில் தமிழகம் முழுவதும் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால், டி-ஷர்ட் தயாரிக்கும் பணிகளில் ஊழியர்கள் இரவு பகல் பாராது பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: கரூரில் நள்ளிரவில் நுழைந்த தனிப்படை.. செந்தில் பாலாஜி நிழல் உலகப் புள்ளியின் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்த போலீஸ்!!




தமிழகம் முழுவதும் விஜய் டி- ஷர்ட்டுக்கு தேவை அதிகரிப்பு
இது தொடர்பாக திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் பிரபாகரன் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, திருப்பூர் ஜவுளி ஆலைகள் மற்றும் பிரத்தியேகமான ஜனநாயகம் படத்தின் பெயர் மற்றும் முதல்வர் விஜயின் படம் பொறித்த டி -ஷர்ட்டுகளை தயாரிப்பதற்காக கூடுதல் நேரத்துடன் பணியாற்றி வருகின்றனர். பல ஆண்டுகளாக இது போன்ற டி-ஷர்ட் தேவைகளை நாங்கள் கண்டதில்லை. தற்போது, இந்த டிசர்ட் தேவைகள் அதிகரித்துள்ளன.
அண்டை மாநிலங்களில் இருந்தும் டி- ஷர்ட் ஆர்டர்
தமிழகம் மட்டும் இன்றி, கேரளம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் ஜனநாயகன் படம் திரையிடப்பட உள்ளதால் அந்த மாநிலங்களை சேர்ந்த விஜயின் ரசிகர்கள் டி- ஷர்ட்களுக்கு ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இதன் மூலம், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் டி- சர்ட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சமணர் படுகை மலையேறி படுத்துப் பார்த்த அமைச்சர் ராஜ்மோகன்.. மதுரையில் நடந்த திடீர் ஆய்வு!!