AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W VS PAK W: சுழட்டியடித்த இந்திய பந்துவீச்சாளர்கள்.. 55 ரன்களுக்குள் சுருண்ட பாகிஸ்தான் மகளிர்!

2026 Womens Asia Cup: 2026 மகளிர் ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் இன்று அதாவது 2026 செப்டம்பர் 5ம் தேதி துபாயில் உள்ள துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இது பாகிஸ்தானுக்கு மோசமாகவே அமைந்தது.

IND W VS PAK W: சுழட்டியடித்த இந்திய பந்துவீச்சாளர்கள்.. 55 ரன்களுக்குள் சுருண்ட பாகிஸ்தான் மகளிர்!
Ind WImage Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 05 Sep 2026 21:53 PM IST

2026 மகளிர் ஆசிய கோப்பையில் (Womens Asia Cup 2026) இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் இன்று அதாவது 2026 செப்டம்பர் 5ம் தேதி துபாயில் உள்ள துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இது பாகிஸ்தானுக்கு மோசமாகவே அமைந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் மகளிர் அணி (Pakistan Womens Cricket Team) விக்கெட்களை விட்டுகொடுத்து ரன்களை எடுக்க திணறியது. மேலும் அந்த அணி 18.1 ஓவர்களில் வெறும் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணிக்காக ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இது பாகிஸ்தானுக்கு ஒரு மோசமான சாதனையாக அமைந்தது.

இப்போது, ​​இந்திய அணி வெற்றி பெற 20 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தால் போதும். குழுநிலைப் போட்டிகளில் தங்களது முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பெரிய சவாலாக இருக்காது. இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் ஆற்றல் இந்திய அணிக்கு உள்ளது.

ALSO READ: ஸ்மிருதியும் ஹர்மன்பிரீத்தும் சரித்திரம் படைப்பார்களா..? காத்திருக்கும் 5 சாதனைகள்!

சீட்டுக்கட்டு போல சரிந்த பாகிஸ்தான்:

பாகிஸ்தான் அணிக்காக ஷவால் சுல்பிகார் மூன்று பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன்களைப் பதிவு செய்தார். பாகிஸ்தான் அணியின் 9 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்களை எட்டத் தவறினர். முனீபா அலி 15 பந்துகளில் ஒரு பவுண்டரியின் உதவியுடன் 13 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, பாகிஸ்தான் அணி சீட்டுக்கட்டு போல சரிந்தது. இரண்டாவது விக்கெட் 28 ரன்களிலும், மூன்றாவது 29 ரன்களிலும், நான்காவது 32 ரன்களிலும், ஐந்தாவது 35 ரன்களிலும், ஆறாவது 35 ரன்களிலும், ஏழாவது 45 ரன்களிலும், எட்டாவது 48 ரன்களிலும், ஒன்பதாவது 54 ரன்களிலும், பத்தாவது 55 ரன்களிலும் வீழ்ந்தது.

ALSO READ: டாஸ் போட்டதும் கைக்கு வந்த உலக சாதனை.. கேப்டனாக கலக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர்..!

முனீபாவும் ஷாவலும் முதல் விக்கெட்டுக்கு 27 ரன்கள் (27 பந்துகளில்) சேர்த்தனர். ஏழாவது விக்கெட்டுக்கு உம்மே ஹானி மற்றும் இமாயன் பாத்திமா இடையே 10 ரன்கள் எடுத்தது இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

பாகிஸ்தான் சார்பில், ஷாவலைத் தவிர, முனீபா 13 ரன்களும், ஆயிஷா ஜாஃபர் 2 ரன்களும், சதாஃப் ஷம்ஸ் 3 ரன்களும், இமாயன் ஃபாத்திமா 5 ரன்களும், உம்மி ஹானி 6 ரன்களும் மற்றும் தூபா ஹசன் 9 ரன்களும் எடுத்தனர். மீதமுள்ள பேட்ஸ்மேன்களான நஷ்ரா சந்து, சாடியா இக்பால், குல் ஃபெரோசா மற்றும் கேப்டன் ஃபாத்திமா சனா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

Follow Us