சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 20, 2026: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான வெயில் கொளுத்தி வந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாகப் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகி வருகிறது. இதனால் அதிகபட்ச வெப்பநிலையின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. எனினும், தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்:
இதன் காரணமாக, ஜூலை 20-ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நாளையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24-ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் நில முறைகேடு பத்திரம் வெளியீடு.. பெரும் அதிர்ச்சி.. நடந்தது என்ன?
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைகு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவில் வெடித்தது பூகம்பம்: சி.வி. சண்முகம் தலைமையில் 1,300 பேர் கூண்டோடு ராஜினாமா!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸைக் கடந்து பதிவான சூழலில், தற்போது அது சற்று குறைந்து காணப்படுகிறது. அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. ஏனைய தமிழகப் பகுதிகளில் அதிகபட்சமாக 34 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.