சோதனை நிறைவு.. விரைவில் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கலாம்?.. மத்திய அமைச்சர் சொன்னது என்ன?
Users Can withdraw PF Money Through UPI Soon | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ள திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த திட்டத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுக்க வேண்டும் என்றால் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பணம் வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வந்த நிலையில், மிக விரைவாக பணத்தை எடுக்க கூடிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை இபிஎஃப்ஓ மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிஎஃப் பணத்தை விரைவில் யுபிஐ மூலம் எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரைவில் யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கலாம்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் பிஎஃப் பணம் எடுப்பதை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் அம்சத்தை அரசு அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது, பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் அம்சத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சோதனை செய்து முடித்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இத்தாலி பிரதமருக்கு மெலோடி சாக்லேட் பரிசளித்த பிரதமர்.. உடனே நடந்த மாற்றம்.. பார்லே பங்குகள் அதிரடி உயர்வு!




யுபிஐ மூலம் பணம் எடுக்க முயற்சி செய்யும் பட்சத்தில் அது நேரடியாக பயனர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பயனர்கள் மிக எளிதாக பிஎஃப் சேவையை பெறும் வகையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போதுள்ள முறைப்படி பணம் எடுக்க சற்று கால அவகாசம் தேவைப்படும் நிலையில், மிக விரைவாக பணத்தை எடுக்க இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.
இபிஎஃப்ஓவில் யுபிஐ எவ்வாறு செயல்படும்?
பிஎஃப் கணக்கில் உள்ள பெரும் பங்கு பணம் யுபிஐ மூலம் எடுக்க வழிவகை செய்யப்படும் நிலையில், குறிப்பிட்ட அளவு பணத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முடக்கி வைக்கும். பயனர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பதையும் தெரிந்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.