இத்தாலி பிரதமருக்கு மெலோடி சாக்லேட் பரிசளித்த பிரதமர்.. உடனே நடந்த மாற்றம்.. பார்லே பங்குகள் அதிரடி உயர்வு!
PM Modi Gift To Italy PM Meloni | இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் இத்தாலி சென்றுள்ளார். அங்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு அவர் பரிசு வழங்கிய வீடியோ இணையத்தில் வைரல்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) இத்தாலி பிரதமர் மெலோனிக்கு (Italy Prime Minister Meloni), மெலோடி சாக்லேட் பரிசளித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், பார்லே (Parle) நிறுவனத்தின் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. மேற்கு ஆசியா போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், பார்லே பங்குகள் மற்றும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, இன்று ஒரே நாளில் பார்லே பங்குகள் 5 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளன.
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பரிசு வழங்கிய பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயண திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இத்தாலி நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு இத்தாலி பிரதமர் மெலோனிக்கு அவர் மெலோடி சாக்லேட் பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், முதலீட்டாளர்கள் பார்லே பங்குகளை வாங்க தொடங்கியுள்ளனர்.




இதையும் படிங்க : Viral Video : பச்சை ரசாயனம் பூசப்பட்ட வெள்ளரிக்காய்.. இணையத்தில் வைரலாகு அதிர்ச்சி வீடியோ!
பார்லே நிறுவனம் மெலோடி சாக்லேட்டுகளை உற்பத்தி செய்வதில்லை. அது பிஸ்கெட், சிற்றுண்டிகள் என எதனையும் தயாரிப்பதில்லை. இந்த மெலோடி சாக்லேட் பார்லே பொருட்களில் இருந்து வருகிறது. பார்லே பங்குகள் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்படவில்லை. அது தொடர்பான பங்குகள் எதுவும் இல்லை. இருப்பினும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பார்லே பெயரில் இருக்கும் பங்குகளை வாங்கியுள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இத்தாலி பிரதமர் மெலோனி, பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்காக பரிசு வாங்கி வந்துள்ளார் என்று கூறுகிறார். உடனே பிரதமர் மோடி மெலோடி (Melody) சாக்லேட் பாக்கெட்டை கேமராவில் காட்டுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் பதிவிட்டுள்ள இத்தாலி பிரதமர் மெலோனி, பரிசுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : கத்தி குத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய இளைஞர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் மெலோனியின் நட்பை குறிக்கும் விதமாக மெலோடி என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தான், மெலோடி என்ற சாக்லேட்டை பிரதமர் மோடி இத்தாலி பிரதமருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அது பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.