நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறை உயர்வு!!
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிர புவிசார் அரசியல் பதற்றத்தின் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: ரூ.2 லட்சத்திற்கு வட்டி மட்டுமே ரூ.90,000.. அசத்தல் லாபம் தரும் அஞ்சலக டைப் டெபாசிட் திட்டம்!
2 வாரங்களில் 4-வது முறை உயர்வு:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை, குறிப்பாக உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உலகளவில் விண்ணைத் முட்டி வருகிறது.
இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தொடர்ந்து 4-வது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 15 அன்று மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தின. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு மேலும் 90 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 2 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்விற்கான முக்கிய காரணங்கள்:
ஈரான் – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வெடித்துள்ள நேரடிப் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை ஸ்தம்பித்துள்ளது. அதோடு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கடல் வழிகள் முடங்கியுள்ளதால், எண்ணெய் நிறுவனங்களின் இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், உள்நாட்டில் தேர்தல் மற்றும் இதர காரணங்களால் விலையை உயர்த்தாமல் பொதுமக்களுக்கு அரசு ஓரளவு பாதுகாப்பு வழங்கியதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான உலகளாவிய தட்டுப்பாடு காரணமாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்க இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
இதையும் படிக்க: சம்பளம் வந்ததும் பணம் காலியாகிவிடுகிறதா?.. இனி உங்கள் நிதி மேலாண்மையை சாட்ஜிபிடி பார்த்துக்கொள்ளும்!
பொதுமக்கள் மற்றும் பொருளாதார தாக்கம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாடப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்து, பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டை கடுமையாகப் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.