பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் 11வது கூட்டம்.. “விக்சித் பாரத் 2047” இலக்கை மையமாக வைத்து ஆலோசனை
இந்த கூட்டத்தில் கடந்த 2025 டிசம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 5வது தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன. அந்த மாநாட்டில் ஆரம்பக் குழந்தைகள் கல்வி, பள்ளிக் கல்வி, திறன் மேம்பாடு, உயர்கல்வி, விளையாட்டு மற்றும் இணைச் செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 11, 2026: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் 11வது கூட்டம் இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் நடைபெற உள்ளது. “விக்சித் பாரத் 2047-க்கான உள்ளடக்கிய மனித மேம்பாடு” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டம், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் “டீம் இந்தியா” என்ற தொலைநோக்கு பார்வையை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வயது, பாலினம், பகுதி, சமூக மற்றும் பொருளாதார பின்னணி என்பவற்றைப் பொருட்படுத்தாமல் சமமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டம்:
இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு மனித வள மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். குறிப்பாக நான்கு முக்கிய துறைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற உள்ளது.
அதன்படி,
- அடிப்படை மனித வள திறன் மற்றும் எதிர்காலத்திற்கான திறன் மேம்பாடு,
- வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி,
- சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் மக்களின் நலன்,
- அனைவருக்கும் சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.
மேலும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கம் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக மாநில அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன ?
அதேபோல் நிர்வாக சீர்திருத்தங்கள், டிஜிட்டல் பொது கட்டமைப்பு (DPI), தரவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் மத்திய-மாநில இணைப்பு மூலம் வளர்ச்சி திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. குறுகிய காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்டகால வளர்ச்சி இலக்குகளை கண்காணிக்கும் நடைமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: ஓமன் கடற்கரையில் இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்… அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்
இந்த கூட்டத்தில் கடந்த 2025 டிசம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 5வது தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன. அந்த மாநாட்டில் ஆரம்பக் குழந்தைகள் கல்வி, பள்ளிக் கல்வி, திறன் மேம்பாடு, உயர்கல்வி, விளையாட்டு மற்றும் இணைச் செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் நாட்டின் நீண்டகால மனித வள வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.