ஓமன் கடற்கரையில் இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்… அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்
ஓமன் கடற்கரை அருகே இந்திய மாலுமிகள் பணியாற்றி வந்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தூதரக அதிகாரிக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கண்டனக் கடிதமான டிமார்ஷே வழங்கியுள்ளது. இந்த தகவல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஓமன் கடற்கரை அருகே இந்தியர்கள் பணியாற்றி வந்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தூதரக அதிகாரிக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கண்டனக் கடிதமான டிமார்ஷே வழங்கியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா டிமார்ஷே எனப்படும் கண்டன கடிதத்தை வழங்கியுள்ளது.
அமெரிக்க தூதருக்கு இந்தியா கண்டனம்
ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே சென்ற கப்பல் மீது தாக்குல் நடத்தப்பட்ட நிலையில் இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. இந்த கப்பலில் 24 இந்தியர்கள் பணியாற்றி வந்த நிலையில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில் 3 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.




இதையும் படிக்க : இந்திய அரசியலில் புதிய வரலாறு.. பிரதமர் மோடி தலைமையில் கூடும் NDA தலைவர்கள்
ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே ஜூன் 10, 2026 அன்று சென்று கொண்டிருந்த வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கப்பலில் மொத்தமாக 24 இந்தியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் குறித்து தகவல் வெளியானதும் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. அதில் தற்போது 21 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 இந்தியர்கள் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திய கப்பல் மீது தாக்குதல்
Ministry of External Affairs summoned Jason Meeks, Chargé d’Affaires of the United States to protest the attack on a ship. The move comes as India condemned the attack on the commercial vessel Settebello off the coast of Oman, which had 24 Indian crew members onboard. While 21… pic.twitter.com/fKl3mMw77y
— ANI (@ANI) June 10, 2026
இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமன் நாட்டின் கடற்கரை அருகே தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் பயணித்த 24 இந்தியர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 3 இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓமனில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை கண்காணித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மாநிலங்களவை வேட்புமனு நிராகரிப்பு.. காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா.. நீதிமன்றத்தை நாட முடிவு!
ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. மேலும் காணாமல் போன இந்தியர்களை கண்டுபிடிக்க ஹெலிஹாப்டர்கள், கடற்படையை சேர்ந்த கப்பல்கள் ஆகியவை முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.