39 மனைவிகள், 94 பிள்ளைகள்.. இந்தியாவை சேர்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பம்!
Worlds largest family living in Mizoram | இந்தியாவின் மிசோரமில் உலகின் மிகப்பெரிய குடும்பம் வசித்து வருகிறது. அந்த குடும்பத்தில் சுமார் 200 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் 100 அறைகள் உள்ள ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் (India) கூட்டு குடும்பங்களாக வாழ்வது பாரம்பரியமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. பெரும்பலானாவர்கள் தனித்து வாழவே விரும்புகின்றனர். திருமணம் முடிந்த கையுடன் தனி குடும்பங்களுக்கு சென்றுவிடுகின்றனர். இந்த நிலையில், நூற்றுக்கணக்கான குடும்ப உறுப்பினர்களை கொண்ட இந்தியாவின் ஒரு குடும்பம் உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் என்ற பெயரை பெற்றுள்ளது. அந்த சுவாரஸ்ய குடும்பத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
39 மனைவிகள், 94 பிள்ளைகளை கொண்ட பெரிய குடும்பம்
இந்தியாவின் மிசோரம் (Mizoram) பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 39 மனைவிகள், 94 பிள்ளைகள் என உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உருவாக்கியுள்ளார். மிசோரமில் உள்ள பக்தவங் பகுதியை சேர்ந்தவர் ஜியோனா சனா. இவரது குடும்பம் தான் உலகின் மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இவர் 2021 ஆம் ஆண்டு தனது 76வது வயதில் காலமானார். இவர் முதல் முதலில் தனது 17வது வயதில் திருமணம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து, 38 முறை அவர் அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார். அதன் விளைவாக அவர் உயிரிழக்கும்போது அவருக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 14 மருமகள்கள் மற்றும் 33 பேரப்பிள்ளைகள் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு.. சிறையில் இருந்தவர் கனடா செல்ல அனுமதி.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!




ஒரே வீட்டில் வசிக்கும் 200 பேர்
இவ்வாறு ஜியோனா சனாவின் மனைவிகள், பிள்ளைகள் என சுமார் 200 பேர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்குவதற்கு ஏதுவாக அந்த வீட்டில் சுமார் 100 அறைகளும் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த குடும்பம், ஒரு குடும்பத்தை போல் அன்றி ஒரு சமூதாயத்தை போல் செயல்படுகிறது. பல தலைமுறையினர் அந்த வீட்டில் வசித்தாலும் அவர்கள் தங்களது பொருப்புகளையும், கடமைகளையும் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துக்கொள்கின்றனர்.
இதையும் படிங்க : அலுவலகத்தில் வைத்து காதலியை கொலை செய்த காதலன்.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்!
ஒரு பெரிய உணவகத்தை போல செயல்படும் சமையலறை
இத்தனை பேரும் தினசரி உணவு உண்பதற்காகவே அந்த குடும்பம் அதிகம் செலவு செய்ய வேண்டியது உள்ளது. உதாரணமாக அந்த குடும்பம் முழுவதும் உண்பதற்கு ஒரு நாளைக்கு 45 முதல் 90 கிலோ அரிசி, 40 கிலோ உருளை கிழங்கு, 25 கிலோ காய்கறிகள், 20 கிலோ பருப்பு ஆகியவை தேவைப்படுமாம். இறைச்சி உண்ணும் பட்சத்தில் 30 முதல் 35 கோழிகள் தேவைப்படுமாம். இந்த பெரிய குடும்பத்தை பராமரிக்க அவரவர்கள் தங்களுக்கான பணிகளை பிரித்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த குடும்பம் குறித்த தகவல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக உள்ளது.