அலுவலகத்தில் வைத்து காதலியை கொலை செய்த காதலன்.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்!
Man Killed Girlfriend In Punjab | பஞ்சாபில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைத்து காதலன் ஒருவர் தனது காதலியை குத்தி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடனான காதலை இளம்பெண் முறித்துக்கொண்ட நிலையில், ஆத்திரமடைந்த அவர் இவ்வாறு செய்துள்ளார்.
பஞ்சாப், ஜூன் 05 : பஞ்சாப் (Punjab) மாநிலம், மொஹாலி என்ற பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பாட்யாலா நகரை சேர்ந்த ஹரிந்தர்சிங் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், டிம்பிள் என்ற 28 வயது பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தான் ஹரிந்தர்சிங், டிம்பிளை அலுவலகத்தில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இளம் பெண்ணின் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காதலியை அலுவலகத்தில் வைத்து கொலை செய்த காதலன்
ஹரிந்தர்சிங் மற்றும் டிம்பிள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், டிம்பிள் தனது காதலன் உடனான உறவை துண்டித்துள்ளார். ஆனால், ஹரிந்தர்சிங் தன்னை காதலிக்க வேண்டும் என காதலியை வற்புறுத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க : 3 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு ரூ.2.24 லட்சம் செலவு.. அதிர வைத்த பெண்ணி வீடியோ!
தற்கொலைக்கு முயன்றநிலையில் படுகாயமடைந்த காதலன்
இந்த நிலையில், மொஹாலியில் உள்ள அலுவலகத்தில் நேற்று (ஜூன் 05, 2026) இரவு 7.30 மணி அளவில் வேலை செய்துக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு சென்ற ஹரிந்தர்சிங் தனது காதலியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதனால், பயந்துப்போன டிம்பிள் அலுவலகத்தில் இருந்து வெளியே தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், ஹரிந்தர்சிங் விடாமல் காதலியை குத்தியுள்ளார். சக ஊழியர்கள் அவரை தடுக்க முயன்ற நிலையில், அவர்களையும் அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க : ரயில்வே உணவில் இனி ஈ, பூச்சிக்கு இடமில்லை: களமிறங்கிய ஐஆர்சிடிசி!
இதனை தொடர்ந்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு அவர் முயன்றுள்ளார். அதன் காரணமாக அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் மீட்ட சக ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.