AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு ரூ.2.24 லட்சம் செலவு.. அதிர வைத்த பெண்ணி வீடியோ!

Pune Woman Monthly Budget Shocks Internet | ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். அதற்கு ஏற்ப அவர்கள் பணத்தை செலவு செய்வர். இந்த நிலையில், பூனேவை சேர்ந்த பெண் ஒருவர் தான் மாதம் ரூ.2.24 லட்சம் பணம் செலவு செய்வதாக கூறியுள்ளார்.

3 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு ரூ.2.24 லட்சம் செலவு.. அதிர வைத்த பெண்ணி வீடியோ!
வீடியோ வெளியிட்ட பூனே பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jun 2026 22:27 PM IST

பூனே, ஜூன் 04 : நாட்கள் செல்ல செல்ல பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு பணவீக்கம், உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன. முன்பெல்லாம் மிக குறைந்த பணத்தில் ஒரு குடும்பத்தை நடத்திய நிலையில், தற்போது இரண்டு மடங்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், பூனேவை (Pune) சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தை நடத்த மாதம் ரூ.2 லட்சம் தேவைப்படுவதாக அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். அந்த பெண்ணின் வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

குடும்பத்தின் மாத செலவு ரூ.2 லட்சம் – பகீர் கிளப்பிய பெண்

சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரும்பாலான குடும்பங்கள் அதிகபட்சமாக ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை ஒரு மாதத்திற்கு செலவு செய்கின்றனர். ஆனால், பூனேவே சேர்ந்த இந்த பெண் ஒரு மாதத்திற்கு சராசரியாக ரூ.2.2 லட்சம் செலவு செய்வதாக கூறுகிறார். பெரும்பாலும் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுகிறோம், மின்சார கார் உள்ளது அதனால் பெட்ரோல் செலவு இல்லை இருப்பினும் மாதம் ரூ.2.2 லட்சம் செலவாவதாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, செலவை குறைக்கவும் அவர் மற்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

இதையும் படிங்க : டெல்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்து.. உடல் கருகி 20 பேர் உயிரிழப்பு!

அப்படி என்னதான் செலவு செய்கிறார்

அந்த பெண்  தான் மாதம் எவ்வளவு செலவு செய்கிறார் என்பது குறித்த விளக்கத்தையும் கூறியுள்ளார். அதில், கட்டுமானத்தில் உள்ள வீட்டுக்கான மாத தவணை ரூ.1.1 லட்சம், தற்போதைய வீட்டு வாடகை ரூ.28,000, மளிகை ரூ.20,000, குழந்தைக்கு கே கேர் ரூ.30,000, அவுட்டிங் மற்றும் பொழுதுபோக்கு ரூ.15,000, மின்சார கட்டணம் ரூ.6,000, இணைய வசதி ரூ.500, ஆன்லைன் உணவு ஆர்டர்கள் ரூ.3,000, ஷாப்பிங் ரூ.10,000, வீட்டு உதவியாளருக்கு ரூ.1,800 என மொத்தமாக ரூ.2,24,300 என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 34 ஆண்டுகள் நடந்த வழக்கு.. 85 வயது முதியவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த பெண்ணி செலவு பட்டியல் குறித்து பலரும் வியந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us