டெல்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்து.. உடல் கருகி 20 பேர் உயிரிழப்பு!
Delhi Restaurant Fire Accident : டில்லி மால்வியா நகரில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொதுமக்கள் சிக்கினர். இதில், சுமார் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
டெல்லி, மால்வியா நகரில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று புதன்கிழமை ( ஜூன் 3) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுமார் 20 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லியின் ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள பல மாடிகளை கொண்ட லெமன் கிரீன் உணவகத்தில் இந்த கொடூர தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று காலை சுமார் 9:45 மணி அளவில் தீ விபத்து நிகழ்ந்ததாக டெல்லி தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்தது. அதன்பேரில், தீயணைப்பு மற்றும் மீட்பு மீட்பு பணிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. அங்கு, கட்டிடத்தின் உள்ளே சிக்கி இருந்தவர்கலை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில், உடல் கருகிய நிலையில் 20 பேர் மீட்கப்பட்டனர். மேலும், 11 பேர் பலத்த தீ காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர்.
காலை தீ விபத்து நிகழ்ந்ததாக தகவல்
இந்த தீ விபத்து நேரு பிளேஸ் தீயணைப்பு நிலையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதி ஆகும். காலை 8:50 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது உணவகத்தின் அடித்தளத்தில் இருந்து மூன்று பேரை டெல்லி தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு கேட்ஸ் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டெல்லி தீயணைப்பு துறை தனது ஆரம்பகட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் இன்று பதவியேற்பு.. சித்தராமையாவுக்கு புதிய பொறுப்பு..




10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு
நேரு பிளேஸ் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த கோட்ட அதிகாரி ரவீந்தர் சம்பவ இடத்தில் இருந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருவதாக தீயணைப்பு துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக டெல்லி காவல்துறை கூறுகையில், கட்டடத்தில் காயம் அடைந்த 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உணவகத்தில் ஏற்பட்ட தீயே கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக மூத்த தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் தொடரும் மீட்பு பணிகள்
பின்னர், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் கட்டிடத்தில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும், மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல உணவகத்தில் நிகழ்ந்த இந்த திடீர் தீ விபத்தால் உள்ளே சிக்கி இருந்தவர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பித்தனர். சிலர் உள்ளே சிக்கியதால் பறிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: 34 ஆண்டுகள் நடந்த வழக்கு.. 85 வயது முதியவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை!