2 வயது தம்பியுடன் பள்ளிக்கு செல்லும் 9 ஆம் வகுப்பு மாணவி.. இணையத்தை கலங்க வைத்த சிறுமியின் கதை!
9th Standard Girl Student Brings Her Brother To School | நேபாளத்தில் தனது தாய் திடீரென உயிரிழந்த நிலையில், 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது 18 மாத தம்பியை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது தொடர்பான வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது.
காத்மண்டு, ஜூன் 02 : நேபாளத்தில் (Nepal) தாய் உயிரிழந்த நிலையில், தனது 2 வயது தம்பியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் 9 ஆம் வகுப்பு சிறுமியின் சோக கதை பலரையும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. சிறுமி தனது தம்பியுடன் வகுப்பறையில் அமர்ந்துக்கொண்டு தனது சூழலை நினைத்து கண்ணீர் விடுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2 வயது தம்பியுடன் பள்ளிக்கு செல்லும் 9 ஆம் வகுப்பு மாணவி
நேபாளத்தில் வசித்து வருபவர் 14 வயது சிறுமி அஸ்மிதா தமங். 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் இந்த சிறுமியின் தாய் எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிட்ட நிலையில், குடும்ப சுமை சிறுமியின் மீது இறக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு 3 சகோதர, சகோரிகள் உள்ளனர். அதில் பிறந்து 18 மாதங்களே ஆன குழந்தை ஒன்றும் உள்ளது. இதன் காரணமாக அந்த சிறுமி தினமும் பள்ளிக்கு தனது 18 மாத தம்பியை அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக தினமும் புத்த பையை மட்டும் சுமந்து செல்லாமல் அந்த சிறுமி, தனது தம்பியை அழைத்துச் செல்கிறார்.
இதையும் படிங்க : இந்தியாவின் பணக்கார சிஎம்.. முதல் 3 இடத்தில் யார் தெரியுமா? விஜய்க்கு எந்த இடம்?
இணையத்தை கலங்க வைத்த சிறுமியின் வீடியோ
A Sister’s Struggle
This Schoolgirl Proves That Sacrifice and Responsibility Have No Age ❤️
Class 9 student Asmita Tamang arrived at school carrying her 1.5-year-old younger brother in her arms.
After the loss of their mother, the responsibility of caring for her little brother… pic.twitter.com/rvkZK85haf— 🌺 Sucheta 🌺🇮🇳 (@SuchetaSagar) June 1, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் சிலர் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு மத்தியில் கைக்குழந்தையுடன் மாணவி ஒருவர் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அவர் தனது நிலையை சொல்ல முடியாமல் மனம் குமுறி அழுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.