AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயில்வே உணவில் இனி ஈ, பூச்சிக்கு இடமில்லை: களமிறங்கிய ஐஆர்சிடிசி!

AI-Powered Surveillance: இந்திய ரயில்வேயில் விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஒரு பிரம்மாண்ட தொழில்நுட்ப புரட்சியை கையில் எடுத்துள்ளது.

ரயில்வே உணவில் இனி ஈ, பூச்சிக்கு இடமில்லை: களமிறங்கிய ஐஆர்சிடிசி!
மாதிரி புகைப்படம்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Jun 2026 16:31 PM IST

இந்தியாவில் வந்தே பாரத் மற்றும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட மொத்தம் 1,453 ரயில்களில் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை ஐஆர்சிடிசி நிறுவனம் வழங்கி வருகிறது. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பயணிகளிடமிருந்து உணவு தொடர்பாக 19,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் பாட்னாவில் இருந்து டாட்டா நகர் சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்குத் தரமற்ற தயிர் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அலட்சியத்திற்காக ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாயும், அந்த ரயிலில் உணவு விநியோகம் செய்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாயும் ரயில்வே அமைச்சகம் அதிரடியாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய கண்காணிப்பு அமைப்பு

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஐஆர்சிடிசி நிறுவனத்தால் ஒரு ஆரம்பகட்ட உணவு கண்காணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த அமைப்பானது மேலும் நவீனப்படுத்தப்பட்டு, மிக பிரம்மாண்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இயங்கி வரும் 800-க்கும் மேற்பட்ட ஐஆர்சிடிசி சமையலறைகள், 2,394 செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மத்திய தலைமை கட்டுப்பாட்டு அறையுடன் (Central Control Room) இணைக்கப்பட்டு, அங்கிருந்தபடியே 24 மணி நேரமும் மிகத் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சமையலறை ஊழியர்களின் தூய்மைப் பணிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்

இந்த அதிநவீன ஏஐ கண்காணிப்பு அமைப்பானது, சமையலறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் முறையான சுகாதார விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை மிகக் கூர்மையாகக் கண்காணிக்கும். சமையல் ஊழியர்கள் தலைக்கவசம் (Headcap), கைகளில் உறைகள் (Hand gloves) மற்றும் முகக்கவசம் (Face mask) ஆகியவற்றைச் சரியாக அணிந்துள்ளனரா என்பதை இந்த கேமராக்கள் தானாகவே கண்டறியும். அதுமட்டுமன்றி, சமையல் கூடங்கள் சரியான இடைவெளியில் சுத்தம் செய்யப்படுகின்றனவா மற்றும் துடைக்கும் பணிகள் தகுந்த தரத்துடன் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா போன்ற சுகாதார நடவடிக்கைகளையும் இந்தத் தொழில்நுட்பம் மிகத் துல்லியமாக ஆராய்ந்து உறுதி செய்கிறது.

பூச்சிகளைக் கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உடனடி எச்சரிக்கை நடவடிக்கை

இந்த புதிய ஏஐ கேமராக்களின் மிக முக்கியமான சிறப்பம்சமே, சமையலறைப் பகுதிகளில் நகரும் மிகச்சிறிய அளவிலான மாசுகளையும் கண்டறிவதுதான். உணவிலோ அல்லது சமையல் கூடத்திலோ 7 முதல் 8 மில்லிமீட்டர் அளவுள்ள சிறிய பூச்சிகள், ஈக்கள் அல்லது வண்டுகள் இருந்தால் கூட, இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு அதனை உடனடியாகக் கண்டறிந்துவிடும். அவ்வாறு ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சமையலறையின் மேலாளருக்கு உடனுக்குடன் எச்சரிக்கும் தகவல் (Alert Message) அனுப்பப்படும். இந்த எச்சரிக்கையைப் பெற்ற பிறகும், அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட சமையலறைப் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உடனடியாகத் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை பாயும் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது.

Follow Us