AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராஜ்ய சபா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு..

தமிழகத்தைப் பொறுத்தவரையில், காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த இடத்திற்கு பிரபல பொருளாதார வல்லுநரும், தரவு ஆய்வாளருமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியான சூழலில், அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜ்ய சபா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Jun 2026 07:22 AM IST

ஜூன் 5, 2026: வரக்கூடிய ஜூன் 18ஆம் தேதி, 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திரா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்கள், ஜார்கண்டில் 2 இடங்கள், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 3 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த சூழலில், இந்த தேர்தலுக்கான 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதில் முக்கியமாக, தமிழகத்தில் தமிழக வெற்றி கழக அரசின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: “13ம் ஜோக்கராக இருந்தால் என்ன செய்ய முடியும்?”.. தவெக அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

எம்.பி தேர்தல்: காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்:

அதாவது, 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் மேலிடம், தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தியை வேட்பாளராக அறிவித்துள்ளது. முக்கியமாக, கர்நாடகா மாநிலத்தில் மல்லிகார்ஜுன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலிகான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மத்திய பிரதேசத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நீரஜ் டாங்கி, ஜார்கண்டில் கமிட்டி செயலாளர் பிரணவ் ஜா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மல்லிகார்ஜுன கார்கே இன்று வேட்புமனு தாக்கல்:

ஜூன் 8ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.

மேலும் படிக்க: தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – 3 பேர் சஸ்பெண்ட்

தமிழகத்தைப் பொறுத்தவரையில், காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த இடத்திற்கு பிரபல பொருளாதார வல்லுநரும், தரவு ஆய்வாளருமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியான சூழலில், அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, ஒரு இடம் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us