தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – 3 பேர் சஸ்பெண்ட்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஜூன் 4, 2026 இன்று லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சிக்கிய 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 4 : தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஜூன் 4, 2026 இன்று லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சிக்கிய 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்திரப்பதிவுக்காக வரும் மக்களிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 25க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
பத்திரபதிவுக்காக வரும் மக்களிடம் ஏக்கருக்கு ஏற்ப லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. இதனையடுத்து திடீர் சோனை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது . இதனையடுத்து புகாருக்குள்ளான 60க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நட்தியது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை – சென்னைக்கு மஞ்சள் அலர்ட்!




இதனையடுத்து திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜூன் 4, 2026 இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 350க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் நிலம் மற்றும் பிற ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு உகந்த ஒரு சுப நாளாக அமைந்ததால், மாநிலம் முழுவதும் அதிக அளவில் பத்திரபதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்த இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள், தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சுமார் 320 ஆண் மற்றும் பெண் காவலர்களைக் கொண்ட DVAC குழுக்கள், பிற்பகல் 2.30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் நுழைந்து, அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். பின்னர், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் பிற முறைகேடுகள் ஏதேனும் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அலுவலகங்களில் இந்த ஆய்வுகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிக்க : புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்வு
கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க முதல்வர் விஜய் உத்தரவு
மேலும் தலைமை செயலக்தில் கனிமவளத்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஜூன் 4, 2026 இன்று ஆய்வு நடத்தினார். அப்போது கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்கவும், கடத்தலை தடுக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். மேலும் கனிமவள வருவாயை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.