7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்றம் செய்து அறிவித்து வருகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பதவிகளும் மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜூன் 4, 2026 இன்று 7 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஜூன் 4 : தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்றம் செய்து அறிவித்து வருகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பதவிகளும் மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜூன் 4, 2026 இன்று 7 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
- மதுரை மாநகர காவல் ஆணையராக கபில்குமார் சரத்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுரை மாநகர ஆணையராக இருந்த அபிஷேக் தீக்ஷித் சென்னை ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி லோகநாதன், தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர்.திருநாவுக்கரசு நெல்லை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி பி.பகலவன் சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை வடக்கு இணை ஆணையர் திஷா மிட்டல் மேற்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை கிழக்கு இணை ஆணையர் பண்டி கங்கநாதர் டிஎன்பிஎல் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை – சென்னைக்கு மஞ்சள் அலர்ட்!




தமிழக அரசு அறிவிப்பு
IPS Transfers & Postings#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |@imrajmohan | pic.twitter.com/NR6gZWI7Bo
— TN DIPR (@TNDIPRNEWS) June 4, 2026
இதற்கிடையில் தமிழக சட்டமன்ற செயலாளராக செயல்பட்டு வந்த சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்தார். கடந்த 15 ஆண்டுகளாக சட்டமன்ற செயலாளராக பணியாற்றிய இவர் ராஜினாம செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து புதிய தமிழக சட்டமன்ற செயலாளராக சாந்தி என்பவரை நியமித்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டார்.
இவர் தமிழகத்தின் முதல் பெண் சட்டமன்ற செயலலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் ஜூன் 4, 2026 இன்று பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற விதிமுறைகள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் குறித்து சட்டமன்ற செயலாளர் ஆலோசகராக பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்வு
இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 5, 2026 நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைச்சரவை கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் இந்த கூட்டத்துக்கு பிறகு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.