AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்வு

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் எஎன அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் முதல்வராக பதவியேற்ற நிலையில் தற்போது வழங்கப்பட்டு வந்த குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்வு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jun 2026 14:40 PM IST

புதுச்சேரி, ஜூன் 4 : புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்க ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் 21 முகவ் 55 வயது வரை உள்ள 64,400 குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்திற்காக ரூ. 16.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை 2500 ஆக உயர்வு

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி கடந்த மே 13,2026 அன்று 5 முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் அவர் தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் எஎன அறிவித்திருந்தார்.

இதையும் படிக்க : எம்.பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி?.. விருப்பம் தெரிவித்த முதல்வர் விஜய்.. இதுதான் காரணம்!!

இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து ஜூன் 4, 2026 இன்று ஆளுநர் கைலாஷ்நாதன் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டு வந்த குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 21 முதல் 55 வயது வரையிலான குடும்பத் தலைவிகள் பயனடையவுள்ளனர்.

இந்த திட்டத்துக்காக புதுச்சேரி அரசு சா்பில் ரூ. 16.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் நிதி ஆதாரத்தை பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியை போலவே தமிழ்நாட்டிலும் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ரூ. 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்த திட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 5, 2026 நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : மின்சாரத்துறை பகீர்.. காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகள்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்கள்!

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ரூ. 2500 ஆக உயர்த்தப்படுவது குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us