AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – இதுதான் உங்க மாற்றமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக தமிழ்நாடு MK Stalin Questions CM Vijay : அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. ஆனால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – இதுதான் உங்க மாற்றமா? மு.க.ஸ்டாலின் கேள்வி
விஜய் - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 May 2026 14:57 PM IST

சென்னை, மே 13 : தேர்தல் முடிவுகள் வெளியான நாட்களில் இருந்து தமிழக அரசியலில் நிலவி வந்த பரபரப்பு கடந்த மே 13, 2026 அன்றுடன் முடிவுக்கு வந்தது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபித்தது. தவெகவிற்கு விசிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுளித்தன. மேலும், அதிமுகவின் ஒரு பகுதி எம்எல்ஏகளும் தவெகவிற்கு ஆதரவளித்தன. இதனால் தமிழக முதல்வராக ஜோசப் விஜய் எந்த சிக்கலும் இல்லாமல் தொடர்கிறார். மேலும் சட்டமன்றத்திலேயே முந்தைய ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் உறுதியளித்தார்.

‘இதுதான் உங்க மாற்றமா?’

அந்த வகையில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இது மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய அவகாசம் வேண்டும் எனவும், மே மாதத்திற்கான உரிமைத்தொகை மே 15, 2026 நாளை வரவு வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 மாதத்திற்கான கலைஞர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தேர்தல் தோல்வி எதிரொலி.. திமுக மா.செ கூட்டத்தில் ஸ்டாலின் கடும் அதிருப்தி.. நிர்வாகிகள் அதிரடி மாற்றம்?

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க : பூலோக வைகுண்டத்தில் சித்திரை திருவிழா: பக்தி பரவசத்தில் தேரோட்டம்!

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாயை கூட தராமல் இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15ம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தை தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us