மது கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து கட்டாய மதமாற்றம்.. இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவிக்கு நடந்த கொடூரம்!
Indian Air Force Officer's Wife Issue | இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரின் மனைவியை, அவரது நண்பர் மற்றும் சிலர் இணைந்து மது குடிக்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து, புகைப்படம் எடுத்து கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூர், ஜூன் 16 : மராட்டிய மாநிலம், நாக்பூர் நகரை சேர்ந்த இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவியை மது குடிக்க வைத்து, பாலிய வன்கொடுமை செய்து, மிரட்டி, மதம் மாற்றம் செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவியான அந்த 24 வயது இளம் பெண்ணின் நண்பர் இந்த கொடூர செயலை செய்துள்ளார். தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கட்டாய மதமாற்றம் – கொடுமை படுத்தப்பட்ட இளம் பெண்
இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவியான அந்த 24 வயது இளம் பெண், தனது நண்பருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், நண்பரின் அழைப்பை ஏற்று, வார்தா சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அந்த ஓட்டலில் இருந்த அயாஸ் தாஜ் மதரே, அமீன் ஹேக் ஆகியோர் இணைந்து இளம் பெண்ணுக்கு மது குடிக்க கொடுத்துள்ளனர். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து, புகைப்படங்கள் எடுத்து மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்யும் வேலையை செய்துள்ளனர்.
இதையும் படிங்க : எல் நினோ என்றால் என்ன? அதிகம் பாதிக்கப்படக்கூடிய இந்திய மாநிலங்கள் எவை?
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
🚨Nagpur police arrests two men after Air Force personnel’s wife accused them of rape, blackmail, forced religious conversion, and occult practices pic.twitter.com/7WuOn51lDL
— The Tatva (@thetatvaindia) June 16, 2026
அந்த கும்பல் இளம் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்வது, பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் இதனை வெளியே கூற அச்சப்பட்ட அந்த இளம் பெண், பிறகு நடந்த அனைத்தையும் தனது கணவரிடம் கூறியுள்ளார். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : முடிவுக்கு வரும் ஈரான் போர்.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
இது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், இளம் பெண் மது போதையில் இருக்கும் நிலையில், அவரின் கையை பிடித்துக்கொண்டு இளைஞர் ஒருவர் மந்திரம் ஓதுவது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.