முடிவுக்கு வரும் ஈரான் போர்.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
PM Narendra Modi On West Asia Pact | ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த மூன்று மாதங்களாக கடும் போர் நிலவி வந்த நிலையில், அது முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஜூன் 16 : மேற்கு ஆசியா போர் (West Asia War) முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தான் வரவேற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் மூன்று மாதங்களாக நீடித்து வந்த இந்த போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அது குறித்து பிரதமர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூன்று மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்த மேற்கு ஆசியா போர்
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது என பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. அன்று தான் ஈரான் போர் உருவானது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வந்த ஈரான், முக்கிய நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணையை மூடியது. அதுவரை மூன்று நாடுகளுக்கே இடையே இருந்த பிரச்னை, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக உலக நாடுகளின் சிக்கலாக மாறியது.




இதையும் படிங்க : மூன்று நாட்களில் மூன்றாவது தாக்குதல்: அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்
காரணம் எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல முடியாததன் காரணமாக உலக நாடுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொண்டன. குறிப்பாக உலக அளவில் பொருளாதார சிக்கலை இந்த போர் உருவாக்கியது. எனவே ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.
மேற்கு ஆசியா போர் நிறைவு – பிரதமர் மோடி வரவேற்பு
இந்த நிலையில் தான் போரை முடிவுக்கு கொண்டு வர உடன்பாடி எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், மேற்கு ஆசியா போர் முடிவுக்கு வந்ததற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
I welcome the understanding reached between the United States and Iran on ending the conflict in West Asia, which has caused serious economic disruption across the world and led to loss of life in many countries.
India hopes that the implementation of this understanding will…
— Narendra Modi (@narendramodi) June 15, 2026
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மேற்கு ஆசியா போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்கா – ஈரான் இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டதை நான் வரவேற்கிறேன். இந்த போர், உலகம் முழுவதும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. பல நாடுகளில் உயிரிழப்பை உண்டாக்கியது என்று அவர் கூறியுள்ளார்.