AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. உயிரை காப்பாற்றிக்கொள்ள கீழே குதித்த பயணிகள் பரிதாப பலி!

4 Passengers Died After Jumping From Train | போபாலில் ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில், அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர் கீழே குதித்துள்ளனர். அப்போது அவர்கள் அந்த ரயில் தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. உயிரை காப்பாற்றிக்கொள்ள கீழே குதித்த பயணிகள் பரிதாப பலி!
அதிர்ச்சியை ஏற்படுத்திய போபால் ரயில் விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Jun 2026 23:54 PM IST

போபால், ஜூன் 14 : மத்திய பிரதேசத்தில் (MP – Madhya Pradesh) ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில், ரயிலில் இருந்து குதித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் ரயிலில் இருந்து வெளியே குதித்த நிலையில், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தி – வெளியே குதித்த பயணிகள்

மத்திய பிரதேச மாநிலம், மொரெனா மாவட்டத்தில் உள்ள ஹேதம்பூர் – கேர் ரயில்வே வழித்தடத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்றுக்கொண்டு இருக்கிறது. வேகமாக சென்றுக்கொண்டு இருந்த அந்த ரயில், திடீரென மெதுவாக செல்ல தொடங்கியுள்ளது. அப்போது ரயிலில் தீப்பிடித்ததன் காரணமாக தான் ரயில் மெதுவாக செல்வதாக வதந்தி கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க : சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்.. மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!

ரயில் மோதி பலியான 4 பயணிகள்

ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில், சில பயணிகள் தங்களது உயிரை பாதுகாத்துக்கொள்ள கீழே குதித்துள்ளனர். அப்போது அவர்கள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தின் மீது நின்றுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த தண்டவாளத்தில் எதிர்பாராத விதமாக வந்த ரயில், அந்த 4 பயணிகளின் மோதியுள்ளது. அந்த விபத்தில் 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : நடுரோட்டில் தவழ்ந்து வந்த பச்சிளம் குழந்தை: மயிர்க்கிழையில் உயிர் தப்பிய வீடியோ!

ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில், உயிரை காப்பாற்றிக்கொள்ள கீழே குதித்த பயணிகள் மற்றொரு ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Follow Us