AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்.. மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!

3 Indian Sailors Death: ஒமன் நாட்டு கடல் பகுதியில் சென்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 3 மாலுமிகள் கடலில் விழுந்து மாயமாகினர். தற்போது, அவர்கள் உயிரிழந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்.. மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!
அமெரிக்கா தாக்கியதில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Jun 2026 15:46 PM IST

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28- ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் அமெரிக்கா படை தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால், ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை அமெரிக்க ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ஹர்முஸ் ஜலசந்தி பகுதி வழியாக செல்லும் கப்பல்கள் மீதும் ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஓமன் நாட்டில் மார்ஷல் தீவு அருகே அரபிக் கடலில் ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.

சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல்

அந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த 24 மாமிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த சரக்கு கப்பலில் வேதிப்பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவை ஏற்றி செல்லப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த கப்பல் மீது அமெரிக்க கடற்படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எறிய தொடங்கியது. அந்த கப்பலில் பயணித்த மாலிமைகள் அனைவரும் உதவி கோரி அழைப்பு விடுத்தனர். அருகில் இருந்த ஓமன் நாட்டு கடற்படையினர் விரைந்து சென்று 21 இந்திய மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும் படிக்க: இந்திய அரசியலில் புதிய வரலாறு.. பிரதமர் மோடி தலைமையில் கூடும் NDA தலைவர்கள்

கடலில் விழுந்து மாயமான 3 மாலுமிகள் உயிரிழப்பு

ஆனால், 3 மாலுமிகள் கடலில் விழுந்து மாயமாகினர். இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடலில் விழுந்து மாயமான 3 இந்திய மாநிலங்கள் உயிரிழந்து விட்டதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு அந்நாட்டுக்கான இந்திய தூதரை அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.

ஒமன் நாட்டு இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவு

ஓமன் நாட்டு இந்திய தூதரகம் கூறுகையில், ஓமனின் ஷினாஸ் துறைமுகம் அருகே கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை அறிந்தோம். இந்த நிலைமையே உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: பதவியேற்று 4399 நாட்கள்.. நேருவைப் பின்னுக்குத் தள்ளி பிரதமர் மோடி மாபெரும் சாதனை!

Follow Us