அசாமில் துயர சம்பவம்.. விமானப்படை விமானம் விபத்து.. 5 வீரர்கள் பரிதாப பலி!
Assam Air Force Aircraft Crashed: அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 விமானம் தரையிறங்கிய போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 விமானப்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். துணை விமானி உயிர் தப்பினார்
அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை விமானப்படை வளாகத்துக்குள் தரை இறங்கிய போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டது. தீயே கட்டுப்படுத்தவும், நிலைமையே மதிப்பிடவும் அவசரகால மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. தற்போது வரை விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இந்த விபத்தில் ஐந்து விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒரு துணை விமானி பலத்த காயமடைந்தார். முதல் கட்ட விசாரணையில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பே விமானம் தரை இறங்கியதாகவும், அதன் காரணமாக விமானப்படை தள வளாகத்துக்குள் உடனடி அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து, இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோர்ஹாட் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ஆக விமானம் விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்தில் அவசர கால மீட்பு குழுவினர்
கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் மேலதிக தகவல்கள் வழங்கப்படும். இந்த விபத்தில் உயிர் தப்பிய துணை விமானிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தளத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு படை மற்றும் அவசரகால மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கூறுகையில் ஜோர்ஹட்டில் இந்திய விமானப்படைக்கு நடந்த போக்குவரத்து விமான விபத்து குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். மேலும் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.
மேலும் படிக்க: பதவியேற்று 4399 நாட்கள்.. நேருவைப் பின்னுக்குத் தள்ளி பிரதமர் மோடி மாபெரும் சாதனை!




ஏஎன்- 32 விமானப்படை விமானத்தின் சிறப்பு
அண்டோனோவ் ஏ என் 32 என்பது இந்திய விமானப்படையின் முக்கிய பணியாளராக விளங்கும் ஒரு உறுதியான மற்றும் இரட்டை எஞ்சின் டர்போப்ராப் ராணுவ போக்குவரத்து விமானம் ஆகும். இந்திய தேவைகளுக்காகவே சோவியத் யூனியனில் முதல் முதலில் உருவாக்கப்பட்ட இந்த ரக விமானங்களில் சுமார் 100- ஐ இந்திய விமானப்படை இயக்குகிறது. இந்த விமானம் கடுமையான சூழல்களில் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொலைதூர பகுதிகளுக்கு பொருள்கள் கொண்டு செல்லப்படும்
உயரமான விமான நிலையங்கள் மற்றும் வெப்பமான வெப்ப மண்டல கால நிலைகளில் கச்சிதமாக செயல்பட்டு வருகிறது. இதனால் 7.5 டன் சரக்கு, 50 பயணிகள் அல்லது 42 வன்கொடை வீரர்களை ஏற்றுக் கொள்ள முடியும். தொலைதூர பகுதிகளில் பொருட்களை விநியோகம் செய்வதற்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: ஓமன் கடற்கரையில் இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்… அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்