IND vs AFG 2nd ODI: தொடரை வெல்லுமா இந்தியா..? ஆப்கானிஸ்தான் எதிரான 2வது ஒருநாள் போட்டி எப்போது..?
IND vs AFG 2nd ODI Live Streaming: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை அதாவது 2026 ஜூன் 17ம் தேதி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது, இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் லக்னோவில் மோதவுள்ளன. இந்தநிலையில், இந்தியா (Indian Cricket Team) மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி லக்னோவின் ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்தியா மற்றும் ஆப்கானிதான் இடையிலான 2வது ஒருநாள் போட்டி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மீண்டும் ரோஹித் சர்மாவை ரன் அவுட்டாகிய கில்.. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது ஒருநாள் போட்டி எப்போது..?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை அதாவது 2026 ஜூன் 17ம் தேதி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடரைக் கைப்பற்றலாம். இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அணி ஒரு அதிர்ச்சி வெற்றியைப் பதிவு செய்தால் தொடரில் நீடிக்க முயற்சிக்கும்.




இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி எத்தனை மணிக்கு நடைபெறும்?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி லக்னோவில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்குத் தொடங்குகிறது. டாஸ் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியை எங்கே நேரலையில் பார்க்கலாம்?
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது ஒருநாள் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் தொலைக்காட்சியில் நேரலையாகக் காணலாம். மொபைல் பார்வையாளர்கள் ஜியோஸ்டாரில் போட்டியை ஸ்ட்ரீம் செய்யலாம்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியை இலவசமாக எங்கு காணலாம்..?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியை நீங்கள் இலவசமாக நேரலையில் பார்க்கலாம். இந்தப் போட்டி டிடி ஸ்போர்ட்ஸில் நேரலையில் ஒளிபரப்பப்படும். நீங்கள் இந்தப் போட்டியை டிடி ஃப்ரீ டிஷிலும் நேரலையில் பார்க்கலாம்.
ALSO READ: விப்ராஜ் செய்த தவறு.. இந்திய ஏ ஸ்கோர்போர்டில் கழிந்த 10 ரன்கள்..!
இந்திய அணியில் மாற்றமா..?
தரம்சாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. இருப்பினும், 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு மாற்றத்தைக் களமிறக்கக்கூடும். பிரின்ஸ் யாதவ் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெறலாம். பிரின்ஸ், ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லக்னோ அவரது சொந்த மைதானமாகும்.