Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமெரிக்க – இந்தியா உறவு.. டிரம்பை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி… நெகிழ்ச்சி பதிவு

PM Modi On US President Donald Trump : பிரதமர் மோடியுடன் நண்பராக இருப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப்  கூறியதற்கு, தற்போது பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார். 

அமெரிக்க – இந்தியா உறவு.. டிரம்பை புகழ்ந்து தள்ளிய பிரதமர்  மோடி… நெகிழ்ச்சி பதிவு
பிரதமர் மோடி - டிரம்ப்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Sep 2025 10:38 AM IST

டெல்லி, செப்டம்பர் 06 :  பிரதமர் மோடியுடன் நண்பராக இருப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் (US President Trump)  கூறியதற்கு, தற்போது பிரதமர் மோடி (PM Modi) பதில் அளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.  அதாவது, ”அதிபர் டிரம்பின் உணர்வுகளையும், நமது உறவுகள் குறித்த அவரது நேர்மறையான மதிப்பீட்டையும் நாங்கள் முழு மனதுடன் பாராட்டுகிறோம். முழுமையாக ஆதரிக்கிறோம். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன” என தெரிவித்தார். அமெரிக்க இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக,   இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்தார்.

அமெரிக்க – இந்தியா உறவு

முதலில் 25 சதவீத விரியை விதித் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் கூடுதலாக 25 சதவீத வரியை அவர் விதித்தார். இதனால், இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ளது. அதோடு, இருநாட்டு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உட்பட பல்வேறு மாநிலங்களில்  ஜவுளி போன்ற பல்வேறு துறைகள் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால், அமெரிக்கா இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இப்படியான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவையும் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டதாகத் தெரிகிறது புகைப்படத்துடன்  தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அவர்களின் எதிர்காலம் நீண்டதாகவும் வளமாகவும் இருக்கட்டும் என்று கூறி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருக்கும் பழைய புகைப்படத்தையும் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

Also Read : எவ்வளவு அழுத்தம் வந்தாலும் நம் பலம் அதிகரிக்கும்.. டிரம்ப் வரி விதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி!

டிரம்பை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

 

தொடர்ந்து, 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் இந்த பதிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த டிரம்ப், “அமெரிக்க அதிபர், மோடியும் நானும் எப்போதும் நண்பர்களாக இருப்போம். அவர் ஒரு சிறந்த பிரதமர். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை.

Also Read : திருப்பூர் டூ ஐடி துறை .. அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு இவ்வளவு பாதிப்பா?

குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவைக் கொண்டுள்ளன. இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நன்றாக நடந்து வருகின்றன. உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடியுடன் நான் மிகவும் நன்றாகப் பழகுகிறேன். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தார்” என்றார். டிரம்பின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அமெரிக்க இந்தியா உறவு டிரம்பின் நேர்மையான கருத்தை நான் பாராட்டுகிறேன் என கூறியிருந்தார்.