டிரம்புடன் பிரச்னை… திடீரென அமெரிக்க பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?
PM Modi US Visit : வரி தொடர்பாக இந்தியா அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 27ஆம் பிரதமர் மோடி அமெரிக்காவில் நடக்கும ஐ.நா சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க இருந்தது. தற்போது, அந்த பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்து இருப்பதாக தெரிகிறது.

டெல்லி, செப்டம்பர் 06 : 2025 செப்டம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற இருந்து ஐக்கிய நாடுகள் சபையில் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி (PM Modi US Visit) கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தற்போது அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற் மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடிக்கு பதிலாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே வரி தொடர்பாக மோதல் இருந்து வரும் நிலையில், தற்போது, தனது அமெரிக்க பயணத்தை மோடி ரத்து செய்துள்ளார். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு டொனால்டு டிரம்ப் விதித்த 50 சதவீத வரியே காரணம். குறிப்காக, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தார்.
இது இந்தியாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், அமெரிக்கா இந்தியா இடையேயான வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தகத்தை சரி செய்ய சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது. மேலும், அண்மையில், சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அதிபர் விளாடிமிர் புதினிடம் நெருக்கமாக பேசினார். இந்த நிகழ்வை அமெரிக்காவும் உற்று நோக்கியது. வரி தொடர்பாக இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார்.
Also Read : இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம் – அதிபர் டிரம்ப் அதிரடி..




அமெரிக்க பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி
அதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் 80வது அமர்வு செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் விவாதம் 2025 செப்டம்பர் 23 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும். இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகத் தலைவர்களிடையே ஐ.நா. பொதுச் சபை மேடையில் இருந்து உரையாற்றுவார்.
மேலும், 2025 செப்டம்பர் 27ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தது. இந்த நிலையில் தான், தற்போது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார். எனவே, ஐக்கிய நாடுகள் சபையில் கூட்டத்தில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார்.
Also Read : டெக் தலைவர்களுக்கு விருந்து வழங்கிய டிரம்ப்.. ஆப்சென்ட் ஆன எலான் மஸ்க்!
’மோடியின் நண்பனாக இருப்பேன்’
முன்னதாக, 2025 செப்டம்பர் 05 ஆம் தேதியான நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், “நான் எப்போதும் மோடியுடன் நண்பனாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். அவர் சிறந்தவர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. இந்தியா ரஷ்யாவிலிருந்து இவ்வளவு எண்ணெய் வாங்கும் என்று நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்” என்றார்.