டெக் தலைவர்களுக்கு விருந்து வழங்கிய டிரம்ப்.. ஆப்சென்ட் ஆன எலான் மஸ்க்!
White House Tech Leaders Dinner | அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்காவில் உள்ள டெக் தலைவர்களுக்கு டொனால்ட் டிரம்ப் விருந்து வழங்கினார். இந்த நிகழ்வில் அமெரிக்காவில் உள்ள அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், எலான் மஸ்க் மட்டும் பங்கேற்கவில்லை.

அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு செப்டம்பர் 04, 2025 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) விருந்து வழங்கினார். இந்த விருந்தில் அமெரிக்காவில் உள்ள அனைத்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், எலான் மஸ்க் (Elon Musk) பங்கேற்கவில்லை. ஏற்கனவே டொனால்ட் டிரம்புக்கும், எலான் மஸ்குக்கும் கடுமையான மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது எலான் மஸ்க் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காததால் அது அவர்களுக்கு இடையேயான விரிசலை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு விருந்து வழங்கிய டிரம்ப்
அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைவர்களான பில் கேட்ஸ், டிம் குக், மார்க் ஜூக்கர்பெர்க், சுந்தர் பிச்சை ஆகியோர் டிரம்பின் இந்த வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்றனர். இந்த விருந்தின் மையத்தில் அமர்ந்திருந்த டிரம்ப் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் மெலானியாவிடம் அவர்களது நிறுவனம் அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு முதலீடு மற்றும் வளர்ச்சி சார்ந்த விருந்தாக அது அமைந்தது.
இதையும் படிங்க : இனி டிவியை நேரடியாக போனில் பார்க்கலாம் – இந்தியாவின் டி2எம் சிப்பை வெளியிட்ட சின்க்ளேர் சிஇஓ




டிரம்பின் விருந்தில் பங்கேற்காத எலான் மஸ்க்
அமெரிக்காவில் மிக முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் டிரம்பின் இந்த விருந்தில் பங்கேற்ற நிலையில் உலக பணக்காரரும், ஸ்டார்லிங், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் இந்த விருந்தில் பங்கேறவில்லை. தேர்தலுக்கு முன்பிலிருந்தே எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் ஒன்றாக பயணம் செய்த நிலையில், டிரம்பை எப்படியாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாங்க நடவடிக்கை, வரி மசோதா ஆகியவற்றில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே கடுமையான மோதல் உருவானது. இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க : தியான்ஜின் SCO மாநாடு.. செய்தியாளர்களுக்கு உதவும் மனித வடிவிலான ரோபோட்!
இந்த நிலையில், டிரம்பின் வெள்ளை மாளிகை விருந்தில் எலான் மஸ்க் பங்கேற்காததற்கு டிரம்ப் அழைப்பு விடுக்காதது காரணமா அல்லது டிரம்ப் அழைப்பு விடுத்தும் மஸ்க் அதனை புறக்கணித்துவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.