Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி டிவியை நேரடியாக போனில் பார்க்கலாம் – இந்தியாவின் டி2எம் சிப்பை வெளியிட்ட சின்க்ளேர் சிஇஓ

Direct to Mobile : இந்தியாவில் உருவான டி2எம் சிப்பை அமெரிக்காவின் சின்க்ளேர் சிஇஓ செப்டம்பர் 1, 2025 அன்று வெளியிட்டார். இந்த தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இனி ஸ்மார்ட்போன் மூலமாக நேரடியாக பார்க்க முடியும். விரைவில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

இனி டிவியை நேரடியாக போனில் பார்க்கலாம் –  இந்தியாவின் டி2எம் சிப்பை வெளியிட்ட சின்க்ளேர் சிஇஓ
டி2எம் சிப்பை அறிமுகப்படுத்திய சின்க்ளேர் சிஇஓ
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Sep 2025 20:53 PM

இந்தியா தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க செய்தி நிறுவனமான சின்க்ளேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, செமிகான் இந்தியா 2025 மாநாட்டுக்கு முன்னதாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட டைரக்ட் டு மொபைல் (Direct-to-Mobile) பற்றி பாராட்டினார். இந்த டி2எம் தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக ஸ்மார்ட் போனில் (Smartphone) ஒளிபரப்ப முடியும். இண்டர்நெட் அல்லது வைஃபை இல்லாமல் பொதுமக்கள் தங்கல் ஸ்மார்ட்போன் மூலம் நேரடியாக டிவி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிவி நிகழ்ச்சிகளை நேரடியாக மொபைல் போனில் பார்க்கலாம்

இந்தியாவில் அறிமுகப்படுத்த டைரக்ட் டு மொபைல் தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சி  நிறுவனங்கள் தங்களது நிகழ்ச்சிகளை நேரடியாக மொபைல் போனில் ஒளிபரப்பு செய்ய முடியும். இதன் மூலம் இண்டர்நெட் இல்லாமல், எந்த ஆப்பும் இல்லாமல், எந்த இடத்தில் இருந்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். இது தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கும் வரும் பட்சத்தில், டிவி இல்லாமல் போன் மூலமாகவே டிவி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

இதையும் படிக்க : ஒரே விநாடியில் நெட்ப்ளிக்ஸ் முழுவதையும் டவுன்லோடு செய்யலாம் – ஜப்பானின் அதிவேக இண்டர்நெட்!

டி2எம் சிப்பை வெளியிட்ட சின்க்ளேர் சிஇஓ

 

செமிகான் இந்தியா 2025 மாநாடு செப்டம்பர் 2, 2025 முதல் செப்டம்பர் 4, 2025 வரை டெல்லி யஷோபூமி கான்ஃபிரன்ஸ் சென்டரில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் டி2எம் சிப் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த நிலையில் சின்க்ளேர் நிறுவனத்தின் சிஇஓ, இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிப்பை பொருததப்பட்ட டேப்லெட்டை செமிகான் இந்தியா மாநாட்டுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து சின்க்ளேர் நிறுவனத்தின் சிஇஓ பேசியதாவது, இந்த டேப்லெட் இந்தியாவில் உருவாக்கப்பட்ட டி2எம், சிப் மூலம் இயங்குகிறது. இந்த தொழில்நுட்பம் உளகை முன்னோக்கி கொண்டு செல்லும் இந்தியாவின் திறமைக்கான உதாரணம். அமெரிக்காவின் உலக நாடுகளை இணைக்கும் அம்சம் என பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிக்க : வைஃபை மூலம் நபர்களை அடையாளம் காணுதல்.. புதிய தொழில்நுட்பத்தால் பாதுகாப்பா..? சிக்கல்களா?

ஐஐடி கான்பூரின் கண்டுபிடிப்பு

இந்த டி2எம் சிப்கள் சாங்கியா லேப்ஸ் என்ற டெஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் துணை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஐஐடி கான்பூரில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிப் மூலம்  வாடிக்கையாளர்கள் நேரடியாக மொபைல் போன் மூலம் பார்க்க முடியும். இது பிருத்வி-3 ஏடிஎஸ்சி 3.0 சிப் செட் மூலம் இயக்கப்படுகிறது.

மார்க் ஒன் – உலகின் முதல் டி2எம் ஸ்மார்ட்போன் டிசைன்

சாங்க்யா லேப்ஸ் நிறுவனம் மார்க் ஒன் என்ற பெயரில் உலகின் முதல் டி2எம் ஸ்மார்ட்போன் டிசனை உருவாக்கி வருகிறது. மேலும் யுஎஸ்பி டாங்கிள் போன்ற பல அம்சங்களை உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பம் கடந்த  2 ஆண்டுகளாக பெங்களூரு, டெல்லி, அமெரிக்கா போன்ற இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.