Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே நாளில் இரண்டு முறை பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!

Pakistan Strikes By Earthquake Twice in a Day | இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று (அக்டோபர் 21, 2025) இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு நிலநடுக்கங்களும் ரிக்டர் அளவில் மிக குறைவானதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இரண்டு முறை பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Oct 2025 08:10 AM IST

இஸ்லாமாபாத், அக்டோபர் 22 : இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் (Pakistan) நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது (NCS – National Center for Seismology). இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு சற்று குறைவான ரிக்டர் அளவிலே நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்ட நிலையில், எந்த வித பெரிய சேதமும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்

இந்தியாவின் அண்டை நாடாக உள்ள பாகிஸ்தானில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 21, 2025) அங்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறைவான அளவு என்றாலும், நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க : மலேசியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்.. 6,000 மாணவர்கள் பாதிப்பு!

3.8 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்

பாகிஸ்தானில் மாலையில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நேற்று (அக்டோபர் 21, 2025) அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 2026-ல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்.. பதற வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 431 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சற்று லேசான நிலநடுக்கமாகவே உள்ள நிலையில், அங்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிய வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.