Vadivelu: நடிகர்கள் குறித்த அவதூறு.. யூடியூபர்கள் மீது புகார் தெரிவித்த வடிவேலு!
Vadivelu Accuses YouTubers: தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் வடிவேலு. இவர் தொடர்ந்து சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர்கள் நடிகர்கள் சங்கத்தின் கட்டிடம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வடிவேலு, அதில் அவதூறு பரப்பு யூடியூபர்கள் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு (Vadivelu) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikath) வரை பல உச்ச நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமானவர். தற்போது இவர் ஹீரோவாக படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக மாரீசன் (Maareesan) என்ற படமானது வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்துகொண்ட வடிவேலு, யூடியூபர்கள் பற்றி புகாரை கொடுத்திருந்தார். அதில் பேசிய நடிகர் வடிவேலு, நடிகர்களும் மற்றும் அவர்களின் படங்கள் மீது பரப்பப்படும் போலியான விமர்சனங்கள் செய்யும் யூடியூபர்கள் (YouTubers) மீது புகார் கொடுத்துள்ளார்.
திரைப்படங்கள் மீது பரப்பப்படும் நெகடிவ் விமர்சங்கள் குறித்து, அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகர் வடிவேலுவின் கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.




இதையும் படிங்க : சரியான விமர்சனங்களை பாருங்க.. படம் எப்படி இருக்குனு நீங்க முடிவு பண்ணுங்க – தனுஷ் பேச்சு!
யூடியூபர்கள் மீது வடிவேலு வைத்த குற்றசாட்டு :
நடிகர் வடிவேலு, ” சிலர் தங்களின் படம் நன்றாக ஓடவேண்டும் என்று, அவர்களுக்கு போட்டியாக வரும் நடிகர்களின் படங்களை , யுடியூபர்களை வைத்து நெகடிவ் விமர்சனங்களை கொடுக்க வைக்கின்றனர். அவ்வாறு கொடுக்கவைத்து அந்த படத்தை தோல்வியடைய வைக்கின்றனர். ஒரு 10 பேர் சேர்ந்து சினிமாவையே அழிப்பதற்கு நினைக்கிறார்கள்.
இதையும் படிங்க : ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட்டை கொடுத்த படக்குழு
நடிகர் சங்கம்தான் இந்த விஷயத்தை தடுக்கவேண்டும், முதல் நாளே ரசிகர்களிடம் ஊடகங்கள் கொடுப்பதை சரிசெய்யவேண்டும்”என நடிகர் வடிவேலு புகாரை கொடுத்துள்ளார். இதற்கு நடிகரும், நடிகர் சங்க துணை தலைவருமான கருணாஸ், “அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் வடிவேலுவின் மாரீசன் படம் தொடர்பாக வெளியான எக்ஸ் பதிவு :
Ellaruma sendhu Thiruvannamalai poitu varuvoma? 🤭😅 pic.twitter.com/BbOvAJQj58
— Netflix India South (@Netflix_INSouth) August 17, 2025
நடிகர் வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த 2025 ஜூலை 25ம் தேதியில் வெளியான திரைப்படம் மாரீசன். இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார். இந்த படமானது முற்றிலும், நகைச்சுவை, எமோஷனல் மற்றும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது.
இதில் நடிகர் பகத் ஃபாசில் திருடன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த ஜூலை 25ம் தேதியில் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்துடன் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தத்க்கது.