Dhanush: சரியான விமர்சனங்களை பாருங்க.. படம் எப்படி இருக்குனு நீங்க முடிவு பண்ணுங்க – தனுஷ் பேச்சு!
Dhanush About Movie Reviews: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில், படத்தின் மீதான விமர்சனங்கள் வருவது பற்றி தனுஷ் ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

நடிகர் தனுஷ் (Dhanush) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தை நடிகர் தனுஷ், இயக்கி அதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இரு நடிகைகள் நடித்திருக்கின்றனர். நடிகை நித்யா மேனன் (Nithya Menen) மற்றும் ஷாலினி பாண்டே (Shalini Pandey) முக்க்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர் மேலும் நடிகர் அருண் விஜய்தான் (Arun Vijay), இப்படத்தின் மெயின் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இட்லி கடை படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில், அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படமானது தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள 4வது படமாகும்.
இப்படத்தின் ட்ரெய்லர் லான்ச் நிகழ்ச்சி நேற்று, 2025 செப்டம்பர் 20ம் தேதியில் கோவையில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், படத்தின் ரிலீசிற்கு முன்னே வரும் விமர்சனங்களை நம்பாதீர்கள் என பேசியிருந்தார். மேலும் அவர் என்ன பேசினார் என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட்டை கொடுத்த படக்குழு
சினிமாவில் படத்தின் மீது வரும் விமர்சனங்கள் குறித்து தனுஷ் பேச்சு :
அந்த நிகழ்ச்சியில், பேசிய தனுஷ், பல்வேறு விஷயங்ககளை தனது ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார். மேலும் தொடர்ந்து மேடையில் அவர், படத்தின் மீது வரும் விமர்சனங்கள் பற்றியும் பேசியுள்ளார். அதில் அவர், “படத்தின் வெளியீட்டின்போது, 9 மணி படத்திற்கு 8 மணிக்கே விமர்சனங்கள் வரும் அதையெல்லாம் நம்பாதீங்க. 9 மணிக்கு படம் ரிலீஸானால் 12 மணிக்குத்தான் படம் எப்படி இருக்கிறது என்றே தெரியும். அதற்கு முன்னே பல விமர்சனங்கள் வரும் அத நம்பாதீங்க. நீங்க படத்தை பார்த்து முடிவு பண்ணுங்க அல்லது உங்கள் நண்பர்கள் படத்தை பார்த்து என்ன சொல்லுறாங்கனு கேளுங்க.
இதையும் படிங்க : இளைஞர்கள் நிச்சயமா வாழ்க்கை பற்றி மேனிஃபெஸ்ட் பண்ணனும் – தனுஷ் கொடுத்த அட்வைஸ்
தனுஷின் இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் எக்ஸ் பதிவு :
The journey from hearth to heart, from roots to reach. Presenting the TRAILER ❤️#IdliKadai Tamil ▶️ https://t.co/sSFVVKkpD3#IdliKottu Telugu ▶️ https://t.co/GHqWLsQno3#IdliKadaiTrailer #IdliKadaiTrailerLaunch#IdliKottu #IdliKottuTrailer @dhanushkraja @arunvijayno1… pic.twitter.com/SzHFGy2wJ7
— DawnPictures (@DawnPicturesOff) September 20, 2025
சினிமாவிற்கு அது இன்றைக்கு மிகவும் தேவை. சினிமா ஆரோக்கியமாக இருக்கனும், நிறைய திரைப்படங்கள் ஓடணும், தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கணும். மேலும் நிறைய தொழில் சினிமாவை நம்பி இருக்கிறது. எல்லா திரைப்படமும் ஓடுறது மிக முக்கிய, அது உங்கள் அனைவரின் கையில்தான் இருக்கிறது. சரியான விமர்சனங்களை பார்த்து நீங்கள் முடிவு பண்ணுங்க படம் எப்படி இருக்கு என்று, அது என்னுடைய வேண்டுகோள். மிக விரைவில் வடசென்னை 2 படம் வருது” என்று நடிகர் தனுஷ் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருந்தார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.