சக்திமான் படத்திற்காக பேசில் ஜோசப் 2 வருசம் காத்திருந்தார் – அனுராக் காஷ்யப்
Director Anurag Kashyap: பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் இந்தி சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேசில் ஜோசப் குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 1997-ம் ஆண்டு முதல் இந்தி சினிமாவில் திரைக்கதை ஆசியராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் அனுராக் காஷ்யப் (Anurag Kashyap). தொடர்ந்து இந்தி சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக இருந்த அனுராக் காஷ்யப் கடந்த 2003-ம் ஆண்டு இந்தி சினிமாவில் வெளியான பான்ஞ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் கே கே மேனன், ஆதித்ய ஸ்ரீவஸ்தவா, விஜய் மௌரியா, ஜாய் பெர்னாண்டஸ், தேஜஸ்வினி கோலாபுரே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அனுராக் காஷ்யப் படங்களை இயக்கியும் திரைக்கதை எழுதியும் வந்தார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதில் குறிப்பாக இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான ப்ளாக் ஃப்ரைடே, நோ ஸ்மோக்கிங், தேவ்டி, தட் கேர்ள் இன் எல்லோ பூட்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசியபூர் 1 மற்றும் கேங்ஸ் ஆஃப் வாசியபூர் 2, அக்லி, பாம்பே வெல்வட், ராமன் ராகவ் 2.0, மேட்லி, முக்காபாஸ், லஸ்ட் ஸ்டோரிஸ், மன்மஸ்ரியான் என பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.
இவர் தொடர்ந்து படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து நடிகராக நடித்து வருகிறார். தொடர்ந்து இந்தி சினிமாவில் பல குற்றச்சாட்டுகளை வைத்துவ் அந்த அனுராக் காஷ்யப் இந்தி சினிமாவை விட்டு வெளியேறி தென்னிந்தியாவிற்கு செல்வதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




சக்திமான் படத்திற்காக 2 வருசம் காத்திருந்த பேசில் ஜோசப்:
இந்த நிலையில் சமீபத்தில் அனுராக் காஷ்யப் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில், மலையாள சினிமாவில் இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசப் சக்திமான் படத்தை இயக்குவதற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்ததாகவும் பிறகுதான் மின்னல் முரளி படத்தை இயக்கியதாகவும் அவர் கூறியதாக தெரிவித்தார். மேலும் இந்த சினிமா துறையில் தாக்குபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது என்று பேசில் கூறியதாகவும் அதை தான் இந்தி சினிமாவில் உணர்ந்ததாகவும் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
Also Read… விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் – என்ன நடந்தது?
இணையத்தில் கவனம் பெறும் அனுராக் காஷ்யப் வீடியோ:
#BasilJoseph spent ❌ wasted ✅ almost 2 years chasing his biggest dream — India’s own superhero, #Shaktimaan..!!pic.twitter.com/tZXfvCKmNk https://t.co/G2XNqTekoR
— AB George (@AbGeorge_) September 22, 2025
Also Read… ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட்டை கொடுத்த படக்குழு