ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி பாடகி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இவர்களின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வருகின்ற 30-ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் போது இருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். பிறகு காதலித்து பெற்றோர்களின் சம்மத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கூட்டணியில் வெளியாகும் பாடல்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. குறிப்பாக காதல் பாடல்களை ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் இணைந்து பாடினால் அது நிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துக்கும். பல காதலர்களுக்கு அது அவர்களின் காதல் அடையாள சின்னமாகவே இருக்கும். அப்படி காதலோடு அந்தப் பாடல் இவர்களின் குரலில் ஒலிக்கும்.
இப்படி ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். மேலும் இருவரும் இணைந்து ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதுகுறித்து யாரும் எந்த விமர்சனமும் வைக்க வேண்டாம் என்று தெரிவித்தனர். பிரிவதாக அறிவித்த பிறகும் அவர்கள் இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளில் ஒன்றாகா பாடல் பாடி வந்ததைப் பார்த்த ரசிகர்கள் நீங்க ஏன் பிரிய முடிவு எடுத்தீர்கள் என்று தொடர்ந்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.




ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் முக்கிய முடிவு:
இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தம்பதியின் பெண் குழந்தை யாரின் பாதுகாப்பில் வளர்வது என்ற கேள்விக்கு சைந்தவி பாதுகாப்பில் வளர தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த விவாகரத்து வழக்கின் இறுதி தீர்ப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட சமீபத்திய எக்ஸ் தள பதிவு:
Different Crafts, Different language – united as Tamil industry and honoured at the 71st NFA 🥇
#MSBhaskar @sinish_s @ImRamkumar_B #Rajakrishnan @tylerdurden_syn @sach135
#Vaathi #Parking #Animal pic.twitter.com/MEud1eucQz
— G.V.Prakash Kumar (@gvprakash) September 24, 2025
Also Read… மலையாளம்னா படம் ஓடியிருக்கும்.. ரிவியூ செய்யும் மனநோயாளிகள்.. கொந்தளித்து பேசிய மெய்யழகன் இயக்குநர்!