Rashmika Mandanna: சினிமாவில் வேலை நேரத்தை நிர்ணயித்தால் நன்றாக இருக்கும்- ராஷ்மிகா மந்தனா!
Rashmika About Film Work Hours: பான் இந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், சினிமாவில் நடிகர்களின் வேலை நேரம் குறித்தும் பேசியுள்ளார். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). அந்த வகையில் இவரின் நடிப்பில் 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தம்மா (Thamma). பாலிவுட் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக வெளியான இப்படமானது, ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. ராஷ்மிகா மந்தனாவின் முதல் ஹாரர் படம் என்ற நிலையிலும், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த திரைப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாக காத்திருக்கும் படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend). இந்த படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்திரன் (Rahul Ravindran) இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முன்னணி நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இப்படம் வருகின்ற 2025 நவம்பர் 7ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது பேசிய ராஷ்மிகா, சினிமாவில் வேலை நேரம் நிர்ணயம் செய்வது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க : சிரஞ்சீவி படத்தில் நான் நடிக்கிறேனா? மாளவிகா மோகனன் விளக்கம்
சினிமாவில் வேலை நேரம் குறைப்பது குறித்து ராஷ்மிகா மந்தனா பேச்சு :
அந்த நிகழ்ச்சியின்போது, ராஷ்மிகா மந்தனாவிடம் சினிமாவில் வேலை நேரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய அவர், “நடிகர்களுக்கும் மட்டுமில்லை, இயக்குநர்கள் முதல் லைட் மேன் வரை, அனைவருக்கு அவர்களுக்கான வேலை நேரத்தை நிர்ணயித்தால் நன்றாக இருக்கும். அது அவர்களுக்கு அவர்களின் குடும்பங்களுடன் நேரத்தை செலவிடவும் உதவும்.
இதையும் படிங்க: சூப்பர் ஹீரோ படம் இயக்கவேண்டும் என்பது எனது ஆசை.. விஷ்ணு விஷால் ஓபன் டாக்!
இனிமேல் நானும் என்னுடைய குடும்பத்துடன் எனது நேரத்தை செலவிட விரும்புகிறேன். மேலும் நான் ஒரு தாயான பிறகு சினிமாவில் எனது நேரம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை” என்று அவர் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :
Happy Diwali ❤️✨
Sending you all love and light always 🫶🏻 pic.twitter.com/28rSLOKPSI— Rashmika Mandanna (@iamRashmika) October 20, 2025
நடிகை ராஷ்மிகா மட்டுமல்ல, சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளும் தங்களின் வேலை நேரத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக தங்களில் கருத்துக்களை தெரிவித்துவருகிறனர். இந்த நேரம் நிர்ணயம் தொடர்பான கருத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்தான்.
இவர் தற்போது தனது படங்களில் 8 மணி நேரம் ஷிப்ட் பிரகாரம் நடித்துவருகிறார். இவருக்கு குழந்தை இருக்கும் நிலையில், இவர் தற்போது கமிட்டாகிவரும் அனைத்து படங்களிலும் இதுபோன்றே செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதை அடுத்ததாக தற்போது ராஷ்மிகா மந்தனாவும் இவர் வழியை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது.