WHO IS YOUR TYPE? இணையத்தில் கவனம் பெறும் ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் ட்ரெய்லர்
The Girlfriend Movie Trailer| பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகர் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna). இவர் கன்னட சினிமாவில் நடித்தப் படங்களில் பிரபலம் ஆனதைவிட தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு பான் இந்திய அளவில் பிரபலமானார் என்பதே குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ், இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார் நடிகை ராஷ்மிகா மந்தனார். பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இறுதியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரூபாய் 1000 கோடிகளை வசூலித்தது. இதன் காரணமாக சினிமா வட்டாரங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை பாக்ஸ் ஆபிஸ் குயின் என்று அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான தம்மா படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ஹாரர் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




இணையத்தில் கவனம் பெறும் தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் ட்ரெய்லர்:
இந்த நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள படம் தி கேர்ள் ஃப்ரண்ட். இந்தப் படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்திரன் எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து நடிகர்கள் தீக்ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல், ராவ் ரமேஷ், ரோகினி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் வித்யா கோப்பினீடி மற்றும் தீரஜ் மொகிலினேனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ற 7-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக நுழையும் பிரபல சீரியல் நடிகர் – வைரலாகும் தகவல்
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
This one’s not your usual love story.. it’ll make you think. ❤️🔥#TheGirlfriend trailer out now..
In cinemas on November 7th ✨🔗https://t.co/D5wKxMIBe0 #TheGirlfriendOnNov7th@Dheekshiths @23_rahulr @HeshamAWmusic #AlluAravind #VidyaKoppineedi #PrashanthRVihari… pic.twitter.com/KAgxb1wnbp
— Rashmika Mandanna (@iamRashmika) October 25, 2025
Also Read… ராயன் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது – நடிகர் விஷ்ணு விஷால்